- Advertisement -
உலக கிரிக்கெட்

120/2 டூ 143க்கு அவுட்.. உலக சாதனை படைத்த ஷார்ஜா மைதானத்தில்.. சொதப்பிய வங்கதேசம்.. ஆப்கன் அபார வெற்றி

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 6ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள சார்ஜாவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் மிகவும் போராடி 49.4 ஓவரில் 235 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஷாகிதி 52 (92), நட்சத்திர அனுபவ வீரர் முகமது நபி அதிரடியாக 84 (79) ரன்கள் குவித்தனர். வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக முஸ்தஃபீசூர் ரஹ்மான் தஸ்கின் அகமது தலா நான்கு விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 236 ரன்களை துரத்திய வங்கதேச அணிக்கு தன்சின் ஹசன் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அபாரம்:

இருப்பினும் சௌமியா சர்க்கார் 32, கேப்டன் நஜ்முல் சான்டோ 47 ரன்கள் எடுத்ததால் 120-3 என வங்கதேசம் நல்ல துவக்கத்தை பெற்று வெற்றி நோக்கி நடைபெற்றது. ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கஜன்ஃபர் வங்கதேச பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டார் என்றே சொல்லலாம். அவருடைய வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மெஹதி ஹசன் 28, ரஹீம் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஹ்ரிடாய் 11, மஹ்மதுல்லா 2 ரன்களில் ரசித் கான் சுழலில் அவுட்டாகி சென்றார்கள். இறுதியில் 34.3 ஓவரிலேயே வங்கதேசத்தை 143 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அல்லா கஜன்ஃபர் 6, ரசித் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ஷார்ஜாவின் சாதனை:

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 120-2 என்ற வலுவான நிலையிலிருந்து வங்கதேசம் பின்னர் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி மேற்கொண்டு 23 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. அதனால் ஆரம்பத்திலேயே இத்தொடரில் அந்த அணி பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: தோல்விக்கு இதான் காரணம்.. முடிஞ்சத விட்டுட்டு விராட், ரோஹித் இதை செஞ்சா இந்தியா ஜெய்க்கலாம்.. மைக்கேல் கிளார்க்

முன்னதாக ஷார்ஜா மைதானத்தில் இந்த போட்டியையும் சேர்த்து வரலாற்றில் மொத்தம் 300 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 300 போட்டிகளை நடத்திய முதல் மைதானம் என்ற தனித்துவமான உலக சாதனையையும் சார்ஜா மைதானம் படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. ஷார்ஜா: 300
2. சிட்னி: 291
3. மெல்போர்ன்: 287
4. ஹராரே: 267
5. லண்டன் லார்ட்ஸ்: 227

- Advertisement -