தோல்விக்கு இதான் காரணம்.. முடிஞ்சத விட்டுட்டு விராட், ரோஹித் இதை செஞ்சா இந்தியா ஜெய்க்கலாம்.. மைக்கேல் கிளார்க்

Micheal Clarke 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த ஊரிலேயே முதல் முறையாக ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற அத்தொடரில் 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சொந்த மண்ணிலேயே இந்தியா மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 3வது முறையாக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் இம்முறை கண்டிப்பாக இந்தியாவை வீழ்த்துவோம் என்று ரிக்கி பாண்டிங் முதல் பட் கமின்ஸ் வரை ஆஸ்திரேலியாவின் முன்னாள் இந்நாள் கேப்டன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இப்போவும் ஜெயிக்கலாம்:

அவர்களுக்கு மத்தியில் இப்போதும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தோல்வியை மறந்து விட்டு புத்துணர்ச்சியுடன் விளையாடினால் இந்தியாவால் வெற்றி பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நியூசிலாந்து தொடரிலிருந்து எதையுமே எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பது இந்திய அணி மிகவும் சோர்வாக இருக்கிறது என்பதை எனக்குச் சொல்கிறது. ரோகித் சர்மா உட்பட இந்திய வீரர்களின் சில ஷாட் செலக்சன் மிகவும் சிறப்பாக இல்லை. சோர்வு காரணமாக ஏற்பட்டது என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இடைவெளி என்று நிறைய கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள்”

- Advertisement -

முக்கிய அட்வைஸ்:

“அதுவே அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் எப்படி விளையாட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். இப்போதும் அவர்கள் இங்கே நிறைய திறமைகள், தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் புத்துணர்ச்சியாக வருவார்கள் என்று நம்புகிறேன். அதுதான் இங்கே இந்திய வீரர்களுக்கு வெற்றிக்கான சாவி. விராட் கோலி நீண்ட காலமாக சிறப்பாக செயல்படவில்லை”

இதையும் படிங்க: நான் இந்தியாவுக்கு விளையாட காரணமே.. 2007இல் யுவராஜ் இங்க செஞ்ச சம்பவம் தான்.. அபிஷேக் பேட்டி

“எனவே அவரும் ரோஹித் சர்மாவும் புத்துணர்ச்சியுடன் வந்தால் அவர்களிடமிருந்து நீங்கள் சிறந்த செயல்பாடுகளை பார்க்க முடியும்” என்று கூறினார். அந்த வகையில் ஒரு தோல்வியால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மோசமான மாறிவிடவில்லை என்றே சொல்லலாம். எனவே நல்ல புத்துணர்ச்சியுடன் தெளிவான பயிற்சிகளை எடுத்து தில்லாக விளையாடினால் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் வெல்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement