சரித்திர டெஸ்ட் போட்டியில் ரஷீத்கான் கைப்பற்றிய முதல் விக்கெட்.! யார் தெரியுமா..?

rashidwicket
- Advertisement -

ஆப்கானிஸ்தானமற்றும் இந்தியாவிற்கு இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 14) முதல் பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது . முதல் நாள் ஆட்டமான நேற்றய போட்டியில் பல்வேறு சாதனைகள் நடந்தேறியது. மேலும், இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நம்பிக்கை பந்துவீச்சாளரான ரஷீத் கான், தனது முதல் விக்கெட்டே கேப்டனின் விக்கெட்டாக கைப்பற்றினார்.

rashidkhan

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அதிகம் பேசப்பட்ட வெளிநாட்டு வீரர் என்றாலே அது ரஷீத் கான் தான். தனது அபாரமான சூழல் பந்து வீச்சில் விக்கெட்டுகளை வாரி தனது பைக்குள் நிரப்பினார். இந்நிலையில் ஆப்கானனிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போடியில் நேற்று இந்தியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணியின் புதிய கேப்டனாக அஜின்கியா ரஹானே செல்லப்பட்டு வருகிறார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ரஷீத் கானின் தந்திரங்கள் முதலில் எடுபடவில்லை. ரஷீத் கானின் பந்துகளை இந்திய வீரரான தவான் மற்றும் விஜய் தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே 45 அப்பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்த போது ரஷீத் வீசிய பந்தில் எல் பி ஆனார்.

rashidfirst

இந்த எல் பி யை ஆட்ட நடுவரிடம் ரஷீத் முறையிட்டார் , ஆனால், ஆட்ட நடுவர் நாட் அவுட் இல்லை என்று அறிவிக்க, பின்னர் 3 வது நடுவரிடம் ரிவீவ் செய்தார் ரஷீத், பின்னர் அது அவுட் என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை கேப்டனின் விக்கெட்டாக கைப்பற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார் ரஷீத்.

Advertisement