ஜெய் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் டாப் பவுலரை தட்டி தூக்கிய பஞ்சாப் அணி – விவரம் இதோ

richardson
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கிய 14 ஆவது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL

அதன்படி தற்போது அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் வெளிநாடுகளை சேர்ந்த சில வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அணிகளும் வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்போது மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது பஞ்சாப் அணியை சேர்ந்த இளம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜெய் ரிச்சர்ட்சன் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

richardson

இதன் காரணமாக தற்போது அவருக்கு பதிலாக மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அடில் ரசீதை பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்காக லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன் பவுலர் ஆக இருக்கும் அவர் வரும் உலக கோப்பை தொடரிலும் முக்கிய வீரராக பங்கேற்க உள்ளார்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் இருந்தாலும் தற்போதைய நிலையில் அவர் இரண்டாம் பாதியில் பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 212 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement