- Advertisement -
ஐ.பி.எல்

இந்தியா சிமெண்ட்ஸ்ஸிடம் இருந்து அதானி குழுமத்திற்கு கைமாறுகிறதா சி.எஸ்.கே – உண்மை என்ன?

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றிலேயே சிஎஸ்கே அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஏனெனில் தோனியின் கடைசி சீசனாக பார்க்கப்பட்ட இந்த தொடரில் வெற்றியுடன் அவருக்கு விடை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்த வேளையில் அந்த அணி தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது அதை மறந்து டி20 உலக கோப்பை பக்கம் அனைவருமே கவனத்தை திருப்பி உள்ளனர். ஆனால் இவ்வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதானி குழுமம் வாங்க இருப்பதாக சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அணியாக இருந்து வரும் வேளையில் இப்படி ஒரு செய்தி பரவி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இது குறித்த உண்மை தகவலை இங்கு காணலாம். அதன்படி : சிஎஸ்கே அணியை அதானி குழுமம் இந்தியா சிமெண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க முற்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் சிஎஸ்கே அணியின் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வருமானம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலேயே அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட அணியாகவும் சென்னை அணி விளங்குகிறது. இப்படி ஒரு லாபம் தரக்கூடிய மிகப்பெரிய அணியை எந்த நிறுவனமும் விற்க முன்வராது.

- Advertisement -

அதோடு அதானி குழுமம் யு.பி.ஐ பரிவர்த்தனையில் செயல்பட முயற்சி செய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களாகவே வங்கிகளுடன் அவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பேடிஎம் சேவையை அதானி குழுமம் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால் நிச்சயம் சிஎஸ்கே அணியை வாங்க இருப்பதாக சிலர் வதந்திகளை தான் பரப்பி இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவிடம் தோற்க இதான் காரணம்.. பிராக்டீஸ் மேட்ச் பிரச்சனையில்ல.. மெய்ன் மேட்ச்ல மிரட்டுவோம்.. வங்கதேச கேப்டன்

அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் சரி, மகளிர் ஐபிஎல் தொடரிலும் சரி அவர்கள் ஏற்கனவே சில அணிகளுக்கு உரிமையாளராக இருப்பதால் மேலும் அணியை வாங்க முற்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -