இந்தியாவிடம் தோற்க இதான் காரணம்.. பிராக்டீஸ் மேட்ச் பிரச்சனையில்ல.. மெய்ன் மேட்ச்ல மிரட்டுவோம்.. வங்கதேச கேப்டன்

Najmul Santo
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியது. ஜூன் ஒன்றாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்டியா 40*, ரிஷப் பண்ட் 53* ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 122/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமதுல்லா 40* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக சிவம் துபே, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

மெய்ன் மேட்ச்சில் சந்திப்போம்:
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சனை விட பேட்டிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் முதன்மை போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதே போல ஹர்திக் பாண்டியா பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தியது இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பதாக அமைந்தது. மேலும் சிவம் துபே பந்து வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் இந்திய அணியில் இதுவரை இருந்த ஒரு சில குழப்பங்களும் கவலையும் இப்போட்டியில் தீர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக விளையாடியது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் இது சாதாரண பயிற்சி போட்டி என்பதால் முதன்மை போட்டிகளில் தங்களுடைய அணி இன்னும் அபாரமாக செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய பேட்டிங் இன்று சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் உலகக் கோப்பையின் முதன்மை போட்டிகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைக்கிறேன். நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி நினைப்பதில்லை. எனவே முதன்மைப் போட்டிகளில் நாங்கள் தைரியமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: இன்னும் எங்க பலத்தை மொத்தமா எறக்கல.. உ.கோ ஜெயிக்க இதை செஞ்சா போதும்.. ரோஹித் பேட்டி

“சோரிபுல் இஸ்லாம் காயத்தை சந்தித்ததால் பரிசோதனைக்கு சென்றுள்ளார். எங்கள் வீரர் இந்த முதல் போட்டிக்கு மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். இதில் தோல்வியை சந்தித்தாலும் முதன்மைப் போட்டிகளில் அனைவரும் அமைதியாக இருந்து நன்றாக செயல்பட வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை ஜூன் ஐந்தாம் தேதி இதே நியூயார்க் மைதானத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement