வெளியில் ரொம்ப ஜாலியா இருப்பாரு. ஆனா கிரவுன்ட்ல இறங்கிட்டா ஆக்ரோஷத்தை காண்பிப்பார் – ஆடம் ஜாம்பா பேட்டி

Zampa
- Advertisement -

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் விராட் கோலி. 2008 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கோப்பையை வென்றதன் மூலம் உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். மேலும் அதன் பின்னர் ஒரு வருடத்திற்கும் இந்திய சீனியர் அணியிலும் இடம் பிடித்திருந்தார். பெரிதாக இடம் கிடைக்கவில்லை என்றாலும் கேப்டனாக இருந்த தோனி அவரது திறமையை அறிந்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார். 2010ஆம் ஆண்டிலிருந்து தனது ருத்ர தாண்டவத்தை ஆடிய விராட் கோலி தற்போது வரை கடந்த பத்து வருடங்களாக முடிசூடா மன்னனாக மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

kohli 2

- Advertisement -

73 சதங்களும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும் குவித்து தற்போதைய ஒரே சர்வதேச வீரர் இவர்தான். விராட் கோலியிடம் இருக்கும் பழக்கம் என்னவென்றால் ஆக்ரோஷமாக ஆடுவது அந்த ஆக்ரோஷத்தை வைத்துதான் களத்தில் தனது முழு திறனையும் வெளிக்கொண்டு வருகிறார் என பலரும் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் எதிரணி வீரர்கள் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டார். எதிரணியில் தோனியே இருந்தாலும் அவரிடம் வம்புக்கு நிற்கும் பழக்கம் கொண்டவர் விராட் கோலி. இப்படிப்பட்ட விராட் கோலி மைதானத்திற்கு வெளியே சென்று விட்டால் படு அமைதியாகவும் சாந்தமான மனிதராகவும் மாறிவிடுவார் என்று பல வீரர்கள் கூறியிருக்கின்றார்.

Zampa 1

இந்நிலையில் விராட் கோலியுடன் பெங்களூரு அணிகள் ஆடிய ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா விராட் கோலியின் குணத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் : “நான் அணியில் இணைந்த முதல் நாளில் எனக்கு வாட்ஸாப்பில் மெசேஜ் செய்தார். அவ்வளவு பெரிய வீரர் தானாகவே வந்து எனக்கு மெசேஜ் செய்தது ஆச்சரியத்தை அளித்தது. மிகவும் அன்பாகப் பேசினார். ஆனால் ஆடுகளம் என்று வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார்.

Kohli

எப்போதும் தீவிரமாக பயிற்சி செய்வார். போட்டியை தீவிரமாக நேசிக்கிறார். அதன் காரணமாகத்தான் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். ஆனால் களத்திற்கு வெளியே வந்தவுடன் அவரை போன்ற ஒரு அருமையான நபரை பார்க்க முடியாது. பேருந்தில் மிகவும் ஜாலியாக இருப்பார். நகைச்சுவைகளை விரும்பி பார்த்து சத்தமாக சிரிப்பார். எங்களுடன் ஷேர் செய்வார். அனைத்தையும் எங்களுடன் சேர்த்துக் கொள்வார். உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த நபர்” என்று தெரிவித்திருக்கிறார் ஆடம் ஜாம்பா.

Advertisement