- Advertisement -
உலக கிரிக்கெட்

கூலான தோனி, குருநாதர் மார்ஷ்.. உலகின் டாப் 3 தரமான விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுத்த கில்கிறிஸ்ட் பேட்டி

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வரலாற்றின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை ஆடம் கில்கிறிஸ்ட்க்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம். அந்தளவுக்கு 90களின் இறுதியில் அறிமுகமாகி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய அவர் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தையே மாற்றியமைத்தார்.

அதற்கு எடுத்துக்காட்டாக 2007 உலகக் கோப்பை ஃபைனலில் இலங்கையை புரட்டி எடுத்த அவர் அட்டகாசமான சதமடித்ததை சொல்லலாம். அந்த வகையில் மொத்தம் 15461 ரன்களை குவித்துள்ள அவர் விக்கெட் கீப்பராக 905 டிஸ்மிஸல்களை செய்துள்ளார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தமக்கு மிகவும் பிடித்த தரமான 3 விக்கெட் கீப்பர்களை கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

தரமான கீப்பர்கள்:

அதில் முதலாவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ரோட்னி மார்ஷ் தம்முடைய ரோல் மாடல் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். அத்துடன் எப்போதும் கூலாக இருக்கும் இந்தியாவின் எம்.எஸ். தோனி, இலங்கையின் கிளாஸ் நிறைந்த குமாரசங்காரா ஆகியோரும் தரமான கீப்பர்கள் என்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். குறிப்பாக தோனி எப்போதும் தன்னுடைய வழியில் விளையாடியதாக கில்கிறிஸ்ட் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோட்னி மார்ஷ் என்னுடைய ரோல் மாடல். அவரைப் போலத் தான் நானும் வர வேண்டும் என்று விரும்பினேன். எம்எஸ் தோனி. அவருடைய பொறுமை மிகவும் பிடிக்கும். தன்னுடைய வழியில் செயல்பட்ட அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அதன் பின் தாம் செய்யும் அனைத்திலும் கிளாஸ் நிறைந்த குமார் சங்ககாரா”

- Advertisement -

தோனி, சங்ககாரா:

“அவர் கீப்பிங் திறமையுடன் பேட்டிங்கில் மேல் வரிசையில் விளையாடுவார்” என்று கூறினார். முன்னதாக கில்கிறிஸ்ட் மற்றும் சங்ககாரா ஆகியோரைக் காட்டிலும் இந்தியாவின் எம்எஸ் தோனி பேட்டிங்கில் அழுத்தமான மிடில் ஆர்டரில் விளையாடி 17000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அதே போல விக்கெட் கீப்பிங்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்வதில் தோனி வல்லவர்.

இதையும் படிங்க: வங்கதேசத்திடம் 16/3 என பாகிஸ்தான் தடுமாற்றம்.. 21 மாதமாக 0.. பாபர் அசாம் பரிதாப சாதனை

அதனாலேயே சங்ககாரா மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோரை விட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பராக தோனி உலக சாதனை படைத்துள்ளார். அது போக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் தோனி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் கில்கிறிஸ்ட், சங்கக்காரா ஆகியோருக்கு நிகரான விக்கெட் கீப்பராக செயல்பட்ட எம்எஸ் தோனி இந்தியாவுக்கு உலக அரங்கில் பல பெருமைகளை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -