2023 உ.கோ வெல்ல சச்சின், தோனி, யுவியை இந்திய அணிக்குள் கொண்டு வாங்க.. ஆடம் கில்கிறிஸ்ட் வித்யாச பேச்சு

Adam Gilchrist
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்கி நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது. அதற்கேற்றார் போல் நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுப்பதாக அமைந்துள்ளது.

மேலும் இத்தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்களை சேர்த்து அணியை மெருகேற்றலாமா என்ற யோசனைகளை இந்திய அணி நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, யுவராஜ் சிங் போன்றவர்களில் யாராவது தங்களுடைய விலைமதிப்பில்லாத அனுபவத்தை இந்திய அணிக்கு கொடுத்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல உதவுவதற்கு வழிவகை செய்ய வேண்டுமென ஆடம் கில்கிறிஸ்ட் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வித்யாசமான ஆலோசனை:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு இந்திய வீரராக இந்தியாவில் விளையாடுவது எப்படி இருக்கும் என்பதை நான் அறிய முடியாது. அது எப்போதும் சுவாரசியமானது. ஒருவேளை நான் இந்திய வட்டாரத்தில் இருந்தால் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி போன்றவர்கள் நேரம் கிடைத்தால் அணியுடன் இருந்து தங்களுடைய அனுபவத்தை கொடுக்க முடியுமா என்று கேட்பேன்”

“அதே போல 2011 தொடரில் வாழ்நாள் பிரச்சனைகளையும் தாண்டி சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் போன்றவர் தம்முடைய அனுபவத்தை வெளிப்படையாக சொல்லுமாறு கேட்க முயற்சித்திருப்பேன். மேலும் அந்த உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி இந்த அணியிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். எனவே அது போன்ற வீரர்களின் அனுபவத்தை பயன்படுத்தி சொந்த மண்ணில் அவர்கள் எப்படி கோப்பையை வென்றார்கள் என்பதை கண்டறிய நான் முயற்சிப்பேன்”

- Advertisement -

“அத்துடன் வெளிப்புற விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் இருப்பது நீங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதற்கு உதவும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் சச்சின் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணியுடன் இணைந்து தங்களுடைய ஆலோசனைகளை வழங்குவது வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் கோச்’சாக இருந்தப்போவே பாத்துருக்கேன்.. அவர் தான் நம்ம 2023 உ.கோ அணியின் துருப்பு சீட்டு.. அகர்கர் உறுதி

இருப்பினும் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஆலோசகராக மகத்தான முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்று இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது. எனவே ஏற்கனவே ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் அது போன்ற திட்டத்தை பிசிசிஐ மீண்டும் கையிலெடுக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement