ஐபிஎல் தொடரில் கோச்’சாக இருந்தப்போவே பாத்துருக்கேன்.. அவர் தான் நம்ம 2023 உ.கோ அணியின் துருப்பு சீட்டு.. அகர்கர் உறுதி

Ajit Agarkar 2
Advertisement

சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெல்வதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முழு மூச்சில் தயாராகி வருகிறது. அதன் முக்கிய பகுதியாக நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பை கோப்பையை வென்று ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்த இந்தியா அடுத்ததாக வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

அதில் முதலிரண்டு போட்டிகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் குல்தீப் யாதவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா போன்ற இதர ஸ்பின்னர்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக திகழும் அவர் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் முறையே 5, 4 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்தியாவின் துருப்பு சீட்டு:
உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2017இல் அறிமுகமாகி வித்தியாசமான சைனாமேன் ஆக்சனை பின்பற்றி பேட்ஸ்மேன்களை திணறடித்து 2019 உலக கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். ஆனால் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறிய அவரை இந்திய அணியை போலவே ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நிர்வாகமும் கழற்றி விட்டது. அதற்கிடையே காயத்தை சந்தித்தாலும் மனம் தளராமல் போராடிய அவர் டெல்லி அணியில் கடந்த 2 வருடங்களாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அதில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி நிறைய விக்கெட்டுகளை எடுத்ததால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் உட்பட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் அவர் தான் இந்தியாவின் துருப்பு சீட்டு பவுலராக இருப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதன் உச்சமாக தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கர் 2023 உலகக்கோப்பையில் குல்தீப் யாதவ் துருப்பச்சிட்டாக செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பு வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் துணை பயிற்சிகளாக இருந்ததால் குல்தீப் எந்தளவுக்கு திறமையுடையவர் என்பதை அங்கு அடைந்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் கோச்’சாக இருந்தப்போவே பாத்துருக்கேன்.. அவர் தான் நம்ம 2023 உ.கோ அணியின் துருப்பு சீட்டு.. அகர்கர் உறுதி

“ஐபிஎல் தொடரின் போது அவருடன் நான் நிறைய நேரத்தை செலவிட்டேன். அவர் ஸ்பெஷலான திறமை கொண்ட வீரர். இங்கே ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவு தேவைப்படுகிறது. அதை இந்திய அணி நிர்வாகம் கொடுப்பதால் நல்ல முடிவுகளும் உங்கள் முன்னே இருக்கிறது. அவர் எங்களுடைய துருப்பு சீட்டு வீரர். குறிப்பாக பல எதிரணிகள் அவரை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள். அவருடைய ஆட்டத்தை பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement