இதை மட்டும் செய்ங்க, நிச்சயம் 2004 மேஜிக் நிகழும் – இந்தியாவை சாய்க்க ஆஸி அணிக்கு கில்கிறிஸ்ட் போட்டு கொடுத்த ஸ்கெட்ச் என்ன

Adam Gilchrist
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிடம் அதிகப்படியான போட்டி நிலவுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வரும் லீக் சுற்றில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள இவ்விரு அணிகளில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மறுபுறம் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா பைனலுக்கு செல்ல இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரும் பிப்ரவரியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

AUs vs IND

- Advertisement -

இருப்பினும் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா கடந்த 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் 2004க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வருகிறது. எனவே இம்முறையும் சொந்த மண் சாதகத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா பைனலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் தரமான வீரர்களை கொண்ட ஆஸ்திரேலியா ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளதால் 2004க்குப்பின் இம்முறை டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

கில்கிறிஸ்ட் ஆலோசனை:
அதை விட 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்று முதல் ஆசிய அணியாக சரித்திரம் படைத்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா முழுமூச்சுடன் களமிறங்க உள்ளது. அதற்காக சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எக்ட்ஸ்ரா ஸ்பின்னரை வைத்து விளையாடும் யுக்திகளை அந்த அணி கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsAUS

இந்நிலையில் 2004இல் ரிக்கி பாண்டிங் மற்றும் தமது தலைமையில் 3 ஸ்பின்னர்களை கொண்டிருந்தும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது போல் இம்முறையும் ஆஸ்திரேலியா சாதனை படைக்கும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்காக நிறைய ஆலோசனைகளை கொடுத்துள்ள அவர் இது பற்றி ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நாங்கள் அப்போது (2004இல்) எங்கள் மனநிலையை மாற்ற முயற்சித்தோம். அதே போலவே இம்முறை ஆஸ்திரேலியர்கள் அதை செய்கிறார்களா என்பதை பார்க்க நான் ஆவலுடன் உள்ளேன். முதலில் அதற்கு அங்கு வெற்றியை தேடிச் செல்ல வேண்டாம் அதே சமயம் சுழல் பந்து வீச்சாளர்களை தடுக்கும் அளவுக்கு உருட்டலான பேட்டிங் செய்ய வேண்டாம். மேலும் நமது பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே ஸ்டம்ப் லைனை தாக்குங்கள். அத்துடன் உங்களது பெருமையை விழுங்கி விட்டு ஆக்ரோசமாக தற்காப்புடன் செயல்படுங்கள்”

Gilchrist

“குறிப்பாக ஆரம்பத்திலேயே ஸ்லிப் வைத்து மிட் விக்கெட் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தி இந்திய பேட்ஸ்மேன்கள் அடிப்பதை தடுத்து நிறுத்துங்கள். அதே போல் ஷார்ட் கவர் மற்றும் ஷார்ட் மிட் விக்கெட் ஆகிய திசைகளிலும் பீல்டரை நிறுத்தி பொறுமையாக காத்திருங்கள். இதை செய்தால் நிச்சயம் தற்போதைய அணியினரும் அங்கே தொடரை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2004இல் நாங்கள் செயல்பட்டது போலவே அசத்துவதற்கு தேவையான தரமான வீரர்களை கொண்டுள்ளது”

இதையும் படிங்க: IND vs NZ : இஷான் கிஷன் ஓப்பனிங் ஆட மாட்டாரு. அவரோட பொசிஷன் இதுதான் – ரோஹித் சர்மா அறிவிப்பு

“அத்துடன் இந்தியாவுக்கு செல்லும் நீங்கள் புதிய ஸ்பின்னர்களை வைத்து அவர்களை திணறுடித்து சாதிக்கலாம் என்று நினைத்தால் நிச்சயமாக நடைபெறாது. எனவே ஆரம்பத்திலேயே உங்களுடைய சிறந்த 4 பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுங்கள். மேலும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்தால் நம்முடைய மிகச் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான நேத்தன் லயன் தன்னுடைய வேலையை மிகச் சிறப்பாக செய்வார். எனவே இம்முறை நம்மால் சாதிக்க முடியும் என்று நான் தைரியமாக உணர்கிறேன். உங்களால் அது முடியும் அதற்காக நீங்கள் செல்லுங்கள்” என்று ஆஸ்திரேலியா அணிக்கு தேவையான திட்டங்களை வகுத்துக் கொடுத்து தன்னம்பிக்கையையும் கில்கிறிஸ்ட் ஊட்டினார்.

Advertisement