- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நம்ப முடியல.. இந்த திட்டத்தை வெச்சு டிராவிஸ் ஹெட்டை இந்தியா அவுட்டாக்கலாம்.. கில்கிறிஸ்ட் ஆலோசனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தியாவின் அந்த தோல்விக்கு டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஏற்கனவே 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் சதத்தை அடித்த அவர் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல இந்த தொடரின் முதல் போட்டியிலும் 89 ரன்கள் அடித்த அவர் இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அப்படியிருந்தும் இதுவரை அவரை விரைவாக அவுட்டாக்கும் திட்டத்தை இந்தியா கண்டறிய முடியாமல் திணறி வருகிறது.

- Advertisement -

கில்கிறிஸ்ட் ஆலோசனை:

இந்நிலையில் டிராவிஸ் ஹெட் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவார் என்பது பெரும்பாலான எதிரணிகளுக்கு தெரியும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தத் திட்டத்தை பின்பற்றி இதுவரை இந்தியா அவரை அவுட்டாகாமல் இருப்பது தமக்கு ஆச்சரியம் என்று கில்க்றிஸ்ட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சுவாரசியமானது”

“அவருக்கு எதிராக இந்தியா ஷார்ட் பிட்ச் பவுலிங் திட்டத்தை பயன்படுத்தி அதை தொடராதது என்னால் நம்ப முடியவில்லை. அந்தத் திட்டத்தை பின்பற்றும் போது அவர் ரன்கள் அடிக்கலாம். ஆனால் இதற்கு முன் நியூசிலாந்து அந்த திட்டத்தை அவருக்கு எதிராக அதிக தாக்கத்துடன் வெற்றிகரமாக பின்பற்றியதை நான் பார்த்துள்ளேன். அவை அனைத்தும் உங்களுடைய திட்டங்களை தெளிவாக உருவாக்குவது பற்றியதை பொறுத்தது”

- Advertisement -

ஹெட் – இந்தியா சவால்:

“மேலும் அழுத்தத்தில் இருந்து அந்த பேட்ஸ்மேன் தப்பிக்காமல் சவாலை கொடுப்பது பற்றியதாகும். இந்தியா அந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். தற்சமயத்தில் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு அதிரடியாக செயல்பட்டு வருகிறார். கடந்த போட்டியில் அஸ்வினை அவர் செட்டிலாக விடாமல் அட்டாக் செய்த விதத்தை நான் விரும்பினேன். அதன் காரணமாக மூன்றாவது போட்டியில் இந்தியா தங்களுடைய திட்டத்தை மாற்றலாம்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா சரிவிலிருந்து மீள வேண்டுமெனில் இதை செய்தே ஆக வேண்டும் – ரிக்கி பாண்டிங் கருத்து

“அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்” என்று கூறினார். இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்க உள்ளது. அந்த போட்டியில் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்க உள்ளது.

- Advertisement -