ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை தடுமாற்றமாக பேட்டிங் செய்து 133/8 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 50 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 138/5 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அதிகபட்சமாக முகமது நவாஸ் 38*, ஹுசைன் தாலத் 32*, ஃபர்ஹான் 24 ரன்கள் எடுத்தனர். அதனால் தங்களுடைய கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்தால் ஃபைனல் செல்லலாம் என்ற நிலைக்கு பாகிஸ்தான் வந்துள்ளது.
தேவையற்ற வம்பு:
மறுபுறம் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இலங்கையின் இறுதிப் போட்டிக்கு வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் லோயர் ஆர்டரில் களமிறங்கிய இலங்கை வீரர் ஹஸரங்கா 2 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்தார். அப்போது பாகிஸ்தானின் அப்ரார் அகமது வீசிய பந்தில் அவர் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்துடன் நடையை கட்டத் துவங்கினார்.
மறுபுறம் அப்ரார் அகமது தம்முடைய 2 கைகளால் ஹஸரங்கா கொண்டாடுவதைப் போல் அவருக்கு முன் கொண்டாடி வெறுப்பேற்றி வழியனுப்பி வைத்தார். பொதுவாக அப்ரார் அகமது விக்கெட்டை எடுக்கும் போது கையை கட்டிக்கொண்டு தம்முடைய தலையை ஒரு பக்கமாக அசைத்துக் கொண்டாடுவார். ஆனால் அங்கே ஹஸரங்காவை அவுட்டாக்கிய அப்ரார் அவரைப் போலவே கொண்டாடி வம்பிழுத்தார்.
பம்பிய பாக் வீரர்:
அதற்கு எதுவும் சொல்லாத ஹசரங்கா அமைதியாக பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பந்து வீச்சில் பாகிஸ்தானின் சாய்ம் ஆயுப்பை கிளீன் போல்ட்டாக்கிய ஹஸரங்கா கையை கட்டிக்கொண்டு பெவிலியினில் அமர்ந்திருந்த அப்ரார் அகமதை பார்த்து ஒரு பக்கமாக தலையை அசைத்து கொண்டாடி பதிலடி கொடுத்தார். அதாவது தம்மைப் போல் கொண்டாடி வம்பிழுத்த அப்ரார் அகமதுக்கு அவரைப் போல கொண்டாடி ஹசரங்கா மாஸ் பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: 10க்கு 10.. 8 வருடம் கழித்து சாதனை வெற்றி.. இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய பாக்? ஃபைனல் வருகிறதா?
அதைப் பார்த்த அப்ரார் அகமது கன்னத்தில் கை வைத்துக்கொண்டு “தேவையின்றி வம்பிழுத்து விட்டமோ?” என்ற வகையில் சிரித்தார். அதனால் போட்டியின் முடிவில் ஹசரங்காவிடம் கை கொடுத்து கட்டிப்பிடித்த அப்ரார் அகமது பவ்யமாக நடந்து கொண்டார். அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



