ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு பந்தும் நிசாங்கா 8, குஷால் மெண்டிஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல குசால் பெரேரா 15, கேப்டன் அசலங்கா 20, சனாகா 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 58/5 என ஆரம்பத்திலேயே சரிந்த இலங்கைக்கு மறுபுறம் போராடிய கமிண்டு மெண்டிஸ் 50 ரன்கள் குவித்து அவுட்டானார்.
8 வருடங்கள் கழித்து:
அவருடன் ஹசரங்கா 15, கருணரத்னே 17 எடுத்தப் போதிலும் 20 ஓவரில் இலங்கை 133/8 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹுசைன் தாலத் 3, ஹரிஷ் ரவூப் 2, ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஃபர்கான் 24, பகார் ஜமான் 17 ரன்கள் எடுத்தார்கள்.
மிடில் ஆர்டரில் கேப்டன் சல்மான் ஆகா 5, சாய்ம் ஆயுப் 2 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் லோயர் ஆர்டரில் ஹுசைன் தாலத் 32* (30), முகமது நவாஸ் 38* (24), முகமது ஹாரிஸ் 13 (11) ரன்கள் எடுத்தனர். இறுதியில் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் 18 ஓவரிலேயே 138/5 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பரிதாப இலங்கை:
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 8 வருடங்கள் கழித்து இலங்கையை தோற்கடித்து பாகிஸ்தான் அசத்தியது. கடைசியாக 2017இல் வென்ற பாகிஸ்தான் அதன் பின் இலங்கைக்கு எதிராக 10 டி20 போட்டிகளிலும் 10 தோல்விகளை சந்தித்தது. அந்த தோல்விகளை நிறுத்தியுள்ள பாகிஸ்தான் கடைசிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினால் ஃபைனல் செல்லலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க:
அதற்கு இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியிடம் வங்கதேசம் தோற்க வேண்டும் என்ற நிலையும் பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது. மறுபுறம் இலங்கைக்கு அதிகபட்சமாக தீக்சனா, ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அடுத்தடுத்த தோல்விகளால் அந்த அணி ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது. ஒருவேளை இலங்கை ஃபைனல் செல்ல வேண்டுமெனில் இன்றைய போட்டியில் வங்கதேசத்திடம் இந்தியா தோற்க வேண்டும். அத்துடன் தங்களது கடைசிப் போட்டியில் இந்திய அணியை இலங்கை வீழ்த்த வேண்டும்.



