யுவராஜ், லாராவுக்கு நன்றி.. ஒரே ஓவரில் 26 ரன்ஸ்.. சிஎஸ்கே’வை தெறிக்கவிட்ட ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

Abishek Sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டி செய்த சென்னை 20 ஓவரில் 165/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரகானே, ஜடேஜா போன்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறிய நிலையில் அதிகபட்சமாக சிவம் துபே மட்டும் அதிரடியாக 45 (24) ரன்கள் எடுத்தார்.

ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ், நாகராஜன், சபாஷ் அஹ்மத், புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 166 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட் 31, ஐடன் மார்க்ரம் 50 ரன்கள் அடித்து 18.5 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

தெறிக்கவிட்ட அபிஷேக்:
அதனால் மொயின் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் 2வது தோல்வியை பதிவு செய்த சென்னை பின்னடைவை சந்தித்தது. இந்த வெற்றிக்கு 37 ரன்களை 308.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கி முக்கிய பங்காற்றி அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக முகேஷ் சௌத்ரி வீசிய இரண்டாவது ஓவரில் 4, 0, 6, 0, 6நோபால், 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட அவர் மொத்தமாக 26 ரன்கள் அடித்து வெற்றியை தலைகீழாக மாற்றினார்.

அந்த வகையில் ஒரே ஓவரில் சென்னையை தெறிக்க விட்ட அவர் பிட்ச் ஸ்லோவாக மாறும் என்பதால் ஹைதெராபாத் அணியின் வெற்றியை எளிதாக்குவதற்காகவே இப்படி முன்கூட்டியே நொறுக்கியதாக கூறியுள்ளார். அத்துடன் பிரைன் லாரா, யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் தம்முடைய அதிரடி ஆட்டத்திற்கு உதவியாக தெரிவிக்கும் அபிஷேக் சர்மா இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பந்து வீசும் போதே பிட்ச் சற்று மெதுவாக இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். எனவே பவர் பிளே ஓவரில் அதிரடியாக விளையாடினால் அதை வைத்து போட்டியை மொத்தமாக நகர்த்தி விடலாம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த ஐபிஎல் தொடருக்காக நாங்கள் முன்கூட்டியே நன்றாக தயாராவதற்கான வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் பெரிய ரன்கள் அடிப்பது முக்கியம் கிடையாது”

இதையும் படிங்க: 166 ரன்ஸ்.. பவர்பிளே’விலேயே மேட்ச்சை முடித்த ஹைதராபாத்.. சிஎஸ்கே அணியின் தோல்விக்கான 3 காரணம் இதோ

“இன்று போகிற போக்கில் நான் விளையாடினேன். இதற்காக யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் என்னுடைய தந்தைக்கு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் அட்டகாசமான வெற்றி பெற்ற ஹைதராபாத் 4 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது.

Advertisement