166 ரன்ஸ்.. பவர்பிளே’விலேயே மேட்ச்சை முடித்த ஹைதராபாத்.. சிஎஸ்கே அணியின் தோல்விக்கான 3 காரணம் இதோ

SRH vs CSK 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் 18வது லீக் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பத்திலேயே தடுமாறிய துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 12 (10), கேப்டன் ருதுராஜ் 26 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த ரகானே தடுமாற்றமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் அதிரடியாக 2 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்க விட்டு போராடிய சிவம் துபே 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்ப்புறம் ஸ்லோயர் பந்துகளை வீசிய ஹைதராபாத் பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாத ரகானே தடுமாற்றமாகவே விளையாடி 35 (30) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய ஹைதராபாத்:
அதே போல அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் 13 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா 31* (23) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் சென்னை வெறும் 165/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக நடராஜன், புவனேஸ்வர் குமார், உனட்கட், சபாஷ் அஹ்மத், கேப்டன் கமின்ஸ் தலா 1 ஒரு விக்கெட் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து 166 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 37 (12) ரன்கள் விளாசி சாஹலர் வேகத்தில் அவுட்டானார். அதே போல மற்றொரு துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தம்முடைய பங்கிற்கு 31 (24) ரன்கள் குவித்து தீக்சனா சுழலில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஐடன் மார்க்ரம் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 50 (36) ரன்கள் வெற்றியை உறுதி செய்து மொய்ன் அலி அவுட்டானார்.

- Advertisement -

இறுதியில் சபாஷ் அஹமத் 18, ஹென்றிச் க்ளாஸென் 10*, நிதிஷ் ரெட்டி 14* ரன்கள் அடித்ததால் 18.1 ஓவரிலேயே 166/4 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதனால் சென்னை சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இப்போட்டியில் ஹைதராபாத் பவுலர்கள் ஸ்லோவான கட்டர் பந்துகளை வீசினார்.

இதையும் படிங்க: 7 ஓவரில் வெறும் 50 ரன்ஸ்.. திணறிய பேட்ஸ்மேன்கள்.. ஹைதெராபாத் வலையில் சிஎஸ்கே விழுந்தது எப்படி?

அதை சரியாக கணிக்க தவறிய சென்னை பேட்ஸ்மேன்கள் கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஹைதராபாத் 277 ரன்கள் அடித்த அதே மைதானத்தில் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை அடிக்கவில்லை. மறுபுறம் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்ட சென்னை பவுலர்கள் முதல் 6 பவர்பிளே ஓவரில் 78 ரன்கள் வழங்கிய போதே வெற்றி காலியானது. போதாகுறைக்கு 31 ரன்கள் அடித்த டிராவிஸ் ஹெட் 0 ரன்களில் தீபக் சஹர் வேகத்தில் கொடுத்த கேட்ச்சை முதல் ஓவரிலேயே மொய்ன் அலி தவற விட்டது தோல்வியை பரிசளித்தது.

Advertisement