
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நவம்பர் 6-ஆம் தேதியான இன்று கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. சற்று முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடும் அபிஷேக் ஷர்மா 68 பந்துகளில் 39 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர அதிரடி வீரரான டிம் டேவிட்டின் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 போட்டிகளில் முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 26 இன்னிங்ஸ்களில் 961 ரன்கள் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக 500 பந்துகளில் அவர் 961 ரன்களை அடித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை குறைந்த பந்துகளில் அடித்த வீரராக ஆஸ்திரேலிய அதிரடி வீரரான டிம் டேவிட் முதலிடத்தில் இருக்கிறார். டிம் டேவிட் சர்வதேச டி20 போட்டிகளில் 569 பந்துகளை சந்தித்து இருக்கும்போது 1000 ரன்களை குவித்திருந்தார். இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட 1000 ரன்களாக சாதனையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது 500 பந்துகளில் 961 ரன்கள் குவித்திருக்கும் அபிஷேக் ஷர்மா இன்னும் 68 பந்துகளில் 39 ரன்கள் அடித்தால் அவரது சாதனையை முறியடிக்கலாம் என்பதனால் நிச்சயம் இந்த போட்டியிலேயே அவர் அந்த சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : முகமது ஷமியை இந்திய அணிக்கு தேர்வு செய்யாமல் நிராகரிப்பது ஏன்? – அஷ்வின் கொடுத்த விளக்கம்
அதேபோன்று இந்திய அணிக்காக அதிவேகமாக டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரராக விராட் கோலி 29 ஆட்டங்களில் 27 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை தொட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார். அவரது சாதனையை சமன் செய்ய இன்றைய போட்டியில் அபிஷேக்சர்மா 39 ரன்கள் அடித்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.