
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 61-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயட்ன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 18.2 ஓவர்களிலேயே நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா ஐ.பி.எல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரும் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 20 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 59 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் 20-க்கும் குறைவான பந்துகளில் அதிகமுறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவே அவர் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
நேற்றைய போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 20 பந்துகளுக்கு குறைவாக நான்காவது முறையாக அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை 20-க்கும் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த பூரானுடன் அந்த இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : சுதர்சன் இந்தியாவின் ஆல் ஃபார்மட் பிளேயரா வருவாரு.. அந்த இரண்டையும் சேத்து காட்டுறாரு.. சேவாக் பாராட்டு
மேலும் சன்ரைசர்ஸ் அணிக்காக மட்டுமே அவர் இந்த நான்கு முறை அரைசதத்தை கடந்து ஒரே அணிக்காக அதிகமுறை குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.