- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க 2 பேரும் குடுக்குற சப்போர்ட் தான் என்னோட அதிரடிக்கு காரணம் – அபிஷேக் சர்மா பேச்சு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஒருபுறம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 37 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

என்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு இவர்கள் 2 பேர் தான் காரணம் : அபிஷேக் சர்மா

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த இரண்டாவது டி20 போட்டியின் போது அந்த அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்காமல் இந்திய அணி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே அடித்திருந்த வேளையில் தனி ஒரு நபராக நின்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எதிரான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 68 ரன்கள் குவித்து தனது அட்டகாசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

டி20 போட்டிகளை பொருத்தவரை துவக்க வீரராக களமிறங்கி 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடி வரும் அவர் தன்னுடைய இந்த அதிரடியான ஆட்டத்திற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரது ஆதரவு தான் காரணம் என்று சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

எப்பொழுது விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் அணியின் நிலைமைக்கு ஏற்ப பேட்டிங் செய்வது வழக்கம். ஆனால் நான் அந்த சூழ்நிலையிலும் பெரிய ரன்களை அடிக்க மட்டுமே யோசிக்கிறேன். அப்படி விரைவாக ரன் குவித்தால் தான் நமது அணிக்கு அது நல்லதாக இருக்கும். என்னுடைய பாணி டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது மட்டும் தான். அதைத்தான் அணியின் நிர்வாகமும் என்னிடம் எதிர்பார்க்கிறது.

- Advertisement -

நான் எப்போதுமே பந்துவீச்சாளருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அவர்களை அழுத்தத்தில் வைக்க மட்டுமே யோசித்து விளையாடுகிறேன். நான் அதிரடியாக விளையாடினால் தான் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது இடத்தில் வரும் வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள். ஏனெனில் எப்போதுமே மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய களமிறங்குபவர்களுக்கு ரன் குவிக்க சிறிது நேரம் தேவைப்படும். அப்போது அவர்களின் மீது இருக்கும் அழுத்தத்தை குறைக்கவே நான் அதிரடியாக விளையாடுகிறேன்.

இதையும் படிங்க : இந்திய அணி மகளிர் உ.கோ ஜெய்ச்சா.. ஜெமிமாவுடன் சேர்ந்து நான் பாடுவேன்.. கவாஸ்கர் மகிழ்ச்சி அறிவிப்பு

கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். நான் இப்படி விளையாடுவது தான் அணிக்கு தேவை என்றும் எனக்கு சப்போர்ட் செய்கின்றனர். அவர்கள் கொடுக்கும் சுதந்திரம் தான் என்னுடைய அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் என அபிஷேக் ஷர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -