
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி முதல் 10 ஓவர்களில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அடுத்த 10 ஓவர்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்து இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 59 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் தனது முக்கிய சாதனை ஒன்றினை தானே தகர்த்துள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சி.எஸ்.கே அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் 15 பந்துகளில் அரைசதம் கடந்து சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஏற்கனவே இந்த சாதனை பட்டியலில் அபிஷேக் ஷர்மா கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது 16 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
இதையும் படிங்க : ஆயுஷ் மாத்ரேவின் காயம் பெருசா இருக்கு.. 2 நாள் கழிச்சு தான் எல்லாம் தெரியும் – மைக்கல் ஹசி ஓபன்டாக்
இந்நிலையில் அவரது இந்த சாதனையை ஒரு பந்துக்கு முன்னதாக தானே முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து டிராவிஸ் ஹெட்டும் 16 பந்துகளில் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.