- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உச்சத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா.. மீண்டும் டாப் 10-ல் வந்த சூரியகுமார் யாதவ் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று வரும் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் இடையில் புதிய டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்ட அபிஷேக் சர்மா :

அப்படி வெளியாகியுள்ள இந்த தரவரிசை பட்டியல் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி வெளியாகியுள்ள இந்த ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா புதிய உச்சத்தை தொட்டுள்ளார். அதுகுறித்த தகவல் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று ஆட்டங்களில் இரண்டு அரை சதத்துடன் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது அபிஷேக் சர்மா 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெறாத அதிகபட்ச புள்ளிகளை தற்போது அபிஷேக் சர்மா பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட் 849 புள்ளிகளுடன் இருக்கிறார். அவருக்கும் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மாக்கும் இடையே 80 புள்ளிகள் வித்தியாசம் இருக்கிறது. அந்த அளவிற்கு யாரும் தொட முடியாத உச்சத்தில் அபிஷேக் சர்மா பலமான நிலையில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கிரிஸ் கெயில் கூட அடக்கி வாசிப்பாரு.. ஆனா அபிஷேக் சர்மா இந்த விடயத்தில் கில்லாடி – முகமது கைப் கருத்து

இந்நிலையில் இந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் கடந்த இரண்டு போட்டிகளில் அரைசதம் கடந்த சூரியக்குமார் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 717 புள்ளிகளுடன் மீண்டும் 7-வது இடத்திற்குள் வந்துள்ளார். அது தவிர்த்து இந்திய வீரர்களில் நட்சத்திர இளம் வீரரான திலக் வர்மா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -