கிரிஸ் கெயில் கூட அடக்கி வாசிப்பாரு.. ஆனா அபிஷேக் சர்மா இந்த விடயத்தில் கில்லாடி – முகமது கைப் கருத்து

Kaif and Abhishek
- Advertisement -

ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்திய டி20 அணியின் துவக்க வீரராக இடம் பிடித்த அபிஷேக் ஷர்மா மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தார். அதோடு மட்டுமின்றி தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் தற்போது இந்திய டி20 அணியின் நிரந்தர துவக்க வீரராக மாறியது மட்டும் இன்றி 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான முதன்மை துவக்க வீரராகவும் விளையாட காத்திருக்கிறார்.

அபிஷேக் சர்மாவை பாராட்டிய : முகமது கைப்

இந்நிலையில் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அற்புதமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மா எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டு வைக்காமல் அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியின் போது 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் இந்த அதிரடியான ஆட்டம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரரான முகமது கைப் அவரை கிரிஸ் கெயிலுடன் ஒப்பிட்டு சில கருத்துக்களை முன் வைத்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : அபிஷேக் சர்மா போன்று தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடும் வீரர்களை நான் பார்த்ததில்லை.

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரிஸ் ஜெயில் அதிரடியான ஷாட்டுகளுக்கு செல்வார். ஆனால் ஒரு சில நல்ல பவுலர்களுக்கு எதிராக அவர் மெய்டன் ஓவர்களை கூட விளையாடுவார். அதேபோன்று பெங்களூரு மைதானத்தை பொருத்தவரை அவர் 6-8 பந்துகள் எடுத்துக்கொண்டு மைதானம் எவ்வாறு இருக்கிறது? என்பதை பார்த்துவிட்டு அதிரடியை துவங்குவார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் மற்றும் கோலிக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – சூரியகுமார் யாதவ்

ஆனால் அபிஷேக்சர்மா விடயத்தில் இது கிடையாது. எந்த மைதானமாக இருந்தாலும் சரி, எந்த பவுலராக இருந்தாலும் சரி முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவதில் அவர் கில்லாடி. அப்படி ஒரு ஆட்டத்தை தான் அவர் தற்போது தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் என அபிஷேக் ஷர்மாவை முகமது கைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement