- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் 4 சிக்ஸர் போதும்.. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

இந்திய அணிக்காக கடந்த 2024-ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அபிஷேக் ஷர்மா இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 596 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதுமட்டும் இன்றி தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலும் மிகச் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்காக அவர் வழங்கி வருகிறார்.

சர்வதேச டி20 போட்டிகளில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் அபிஷேக் சர்மா :

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளை சந்தித்த அவர் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 187.5 ரேட்டுடன் 30 ரன்கள் குவித்திருந்தார். அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது 13 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 238 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 31 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான துவக்கம் இந்திய அணியின் வெற்றிக்கும் உதவியிருந்தது. ஆசிய கோப்பை தொடரின் முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 5 சிக்ஸர்களை அடித்திருக்கும் வேளையில் இன்னும் நான்கு சிக்ஸர்களை அடித்தால் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் புதிய சாதனையையும் நிகழ்த்த காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை 19 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 46 சிக்ஸர்களை அடித்திருக்கும் வேளையில் மேலும் 4 சிக்ஸர்களை அடுத்த போட்டியில் அவர் அடிக்கும் பட்சத்தில் 20 போட்டிகளிலேயே 50 சிக்ஸர்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீரராகவும் சாதனை நிகழ்த்துவார்.

- Advertisement -

நிச்சயம் அவர் அடுத்த போட்டியிலேயே அதனை செய்வார் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஓமன் அணிக்கு எதிராக தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கும் வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று சூப்பர் போர் சுற்றுக்கு செல்லும் என்பது உறுதி.

இதையும் படிங்க : சுப்மன் கில்லை துணை கேப்டனாக ஆக்கியதே இதுக்காக தான்.. எல்லாம் கம்பீரோட பிளான் தான் – மனோஜ் திவாரி பேட்டி

இந்திய அணிக்காக இந்த ஆண்டு மற்றும் 27 சிக்ஸர்களை அடித்துள்ள அவர் சர்வதேச டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -