சுப்மன் கில்லை துணை கேப்டனாக ஆக்கியதே இதுக்காக தான்.. எல்லாம் கம்பீரோட பிளான் தான் – மனோஜ் திவாரி பேட்டி

Manoj Tiwary and Gill
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதோடு கடந்த ஓராண்டுக்கு பிறகு டி20 போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு வருவது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்டதே கம்பீரால் தான் : மனோஜ் திவாரி

மேலும் விரைவில் ரோகித் சர்மாவின் ஒருநாள் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து சுப்மன் கில்லுக்கு செல்லும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இப்படி மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக மாறவுள்ள சுப்மன் கில் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் முழுக்க முழுக்க காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி சில கருத்துகளை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

சுப்மன் கில் நல்ல சிறப்பான பேட்ஸ்மேன் தான். இந்திய அணிக்காகவும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் சரி, அவர் அற்புதமாக செயல்பட்டுள்ளார். அதேபோன்று கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கடந்த ஓராண்டாகவே அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

- Advertisement -

டி20 போட்டிகளில் அற்புதமான துவக்கத்தை அளித்த அவர்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான துவக்க வீரர்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால் இந்த சூழலில் தான் தற்போது சுப்மன் கில் மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ளார். அதனால் சஞ்சு சாம்சனின் பேட்டிங் ஆர்டர் மாறியுள்ளது. சுப்மன் கில்லை அணிக்குள் கொண்டு வரவும், துணை கேப்டன் பதவி வழங்கவும் காரணமே கம்பீர் தான்.

இதையும் படிங்க : பலராலும் செய்ய முடியாத அதை சுப்மன் கில் ரொம்ப ஈஸியா செய்றாரு – மொயின் அலி, ஆதில் ரஷீத் பாராட்டு

ஏனெனில் கம்பீருக்கு தான் சொல்வதைக் கேட்கும் ஒரு வீரர் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அந்த வகையில் கம்பீர் என்ன சொன்னாலும் சுப்மன் கில் கேட்டுக் கொள்வார் என்பதனாலே அவரை துணை கேப்டனாக கொண்டு வந்துள்ளார். விரைவில் அவரை ஒருநாள் கேப்டனாகவும் கம்பீர் மாற்ற முயற்சிப்பார் என மனோஜ் திவாரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement