- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்க்க காத்திருக்கும் – அபிஷேக் சர்மா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது ஆட்டமானது நவம்பர் 2-ஆம் தேதியான இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யும் நோக்கில் விளையாட உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அபிஷேக் சர்மா :

இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் துவக்க வீரரான அபிஷேக் சர்மா 37 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 68 ரன்கள் குவித்து தனது அசுத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த போட்டியிலும் அதிரடியாக விளையாடியது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று இருந்தது. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற இருக்கும் வேளையில் இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை சர்வதேச டி20 போட்டிகளில் தகர்க்க அபிஷேக் ஷர்மா காத்திருக்கிறார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரராக விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி தனது 29-வது போட்டியின் போது 27 இன்னிங்ஸ்களில் விளையாடி 1000 ரன்களை தொட்டு இந்திய வீரராக அதிவேகமாக 1000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இதுவரை 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா 25 இன்னிங்ஸ்களில் 936 ரன்களை குவித்துள்ள வேளையில் மேலும் 64 அவர் இந்த போட்டியில் அடிக்கும் பட்சத்தில் தன்னுடைய 27-வது போட்டியிலேயே அதுவும் 26 ஆவது இன்னிங்ஸிலேயே 1000 ரன்களை அடித்து விராட் கோலியின் அந்த சாதனையை முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2 சீனியர் வீரர்களை வெளியேற்றப்போகும் அபிஷேக் நாயர்.. கே.கே.ஆர் அணியில் ஏற்படப்போகும் மாற்றம் – விவரம் இதோ

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் தற்போது அபிஷேக் சர்மா அவருக்கு கிடைத்துள்ள துவக்க வீரருக்கான இடத்தினை கெட்டியாக பிடித்துக்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -