
இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சரி பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடியான துவக்கத்தை கொடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார்.
இந்த தொடரில் இனி வரும் போட்டிகளிலும் இவரது ஆட்டம் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலககோப்பை தொடரிலும் அவரே இந்திய அணியின் துவக்க வீரராக இருப்பார் என்று தெரிகிறது.
பயிற்சிகளின் போதே பிரமாண்ட சிக்ஸர்களை அடித்து மிரள விட்ட அபிஷேக் ஷர்மா போட்டிகளின் போதும் துவக்க ஓவர்களில் இருந்தே பந்துவீச்சாளர்களை எதிர்த்து அதிரடியாக விளையாடுகிறார். இந்நிலையில் தற்போதைய சர்வதேச டி20 போட்டிகளில் உலகளவில் அபிஷேக் ஷர்மா சிறந்த துவக்க வீரர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் ஷர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஷாஹீன் ஷா அப்ரிடி ஓவரில் முதல் பந்தில் இறங்கி வந்து பவுண்டரி அடித்தது மட்டுமின்றி அடுத்த பந்திலும் அவர் சிக்சரை விளாசினார்.
இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராகவே அபிஷேக் சர்மா இருக்கிறார். எப்போதுமே அதிரடியாக விளையாட விரும்பும் அவர் இலக்கு 50-ஆக இருந்தாலும் சரி, 200-ஆக இருந்தாலும் சரி முதல் பந்தில் இருந்தே பவுலர்களை அட்டாக் செய்து விளையாடுகிறார். இதன் காரணமாகவே அவரை தற்போதைய சிறந்த டி20 ஓப்பனர் என்று தான் கூறுவதாகவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைச்சா ரெக்கார்டு கன்பார்ம்.. அர்ஷ்தீப் சிங் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ
நடப்பு 2025 ஆசிய கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியானது ஓமன் அணியை எதிர்த்து செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.