இதுக்கு காரணமான யுவ்ராஜ் சிங்கிற்கு நன்றி.. ஹைதராபாத் கம்பேக் கொடுக்கும்.. அபிஷேக் சர்மா அப்பா பேட்டி

Abhishek Sharma
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பட் கமின்ஸ் தலைமையில் கடந்த வருடம் மிரட்டிய அந்த அணி ஃபைனல் வரை சென்று தோன்றது. அதே வேகத்தில் இந்த வருடமும் முதல் போட்டியில் 286 ரன்களை விளாசி ராஜஸ்தானை நொறுக்கிய ஹைதராபாத் அபார வெற்றி பெற்றது.

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தடுமாற்றமாக விளையாடிய பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று தொடரை வெற்றிகரமாக முடித்தது. அந்த அணிக்கு இந்த வருடமும் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 13 போட்டிகளில் 439 ரன்களை 193.39 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி 2 ஆட்டநாயகன் விருதுகள் வென்று வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

பின்னணியில் யுவ்ராஜ்:

கடந்த வருடம் ஹைதராபாத் அணிக்காக அபாரமாக விளையாடி ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றி அபிஷேக் சர்மாவுக்கு இந்தியாவுக்காக டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்துக்கு எதிராக சதத்தை அடித்து அசத்தினார். அதனால் இந்திய அணியில் ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்துள்ள அபிஷேக் 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக 141 (55) ரன்களை தெறிக்க விட்டு பல சாதனைகளைப் படைத்தார்.

இந்நிலையில் தம்முடைய மகன் அபிஷேக் ஷர்மாவின் இந்த வெற்றிகரமான ஆட்டத்திற்கு ஜாம்பவான் யுவராஜ் சிங் பின்னணியில் முக்கிய பங்காற்றியதாக அவருடைய அப்பா ராஜ்குமார் சர்மா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத் இம்முறை தோற்றது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும் அடுத்த வருடம் ஹைதராபாத் கம்பேக் கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஹைதராபாத் கம்பேக்:

இது பற்றி ராஜ்குமார் சர்மா பேசியது பின்வருமாறு. “அபிஷேக்கின் வெற்றிகளில் யுவ்ராஜ் சிங் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். அபிஷேக்குடன் சேர்ந்து அவர் கடினமாக வேலை செய்துள்ளார். அவருடன் சேர்ந்து அபிஷேக் தம்முடைய தன்னுடைய முயற்சிகளைப் போட்டுள்ளார். என்னுடைய மகனால் பெருமையடைகிறேன். அவருடைய கடினமான உழைப்பு அவரை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது”

இதையும் படிங்க: தோனிகிட்ட அந்த ஃபயர் இருக்கு.. ஃபிட்னெஸ் இருந்தா 2026இல் விளையாடுவாரு.. இல்லனா ஓய்வு.. உத்தப்பா பேட்டி

“இந்த விளையாட்டு என்பதே செயல்பாடுகளைப் பற்றியதாகும். இங்கே சிறப்பாக செயல்படுபவர்கள் முன்னோக்கிச் செல்வார்கள். ஹைதராபாத் மிகவும் நல்ல அணி. ஆனால் இந்த வருடம் ஏன் அவர்கள் அதிகப் போட்டிகளை வெல்லவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. ஐபிஎல் துவங்கிய போது அவர்கள் நன்றாகவே செயல்பட்டனர். பரவாயில்லை. தடுமாறக்கூடிய விஷயங்களை சரி செய்து அவர்கள் அடுத்த வருடம் சிறப்பாக வருவார்கள்” என்று கூறினார்.

Advertisement