என்கிட்ட மோதாத.. திக்வேஷ் – அபிஷேக் சர்மா மெகா சண்டை.. ராஜிவ் சுக்லா தலையீடு.. நடந்தது என்ன?

Abhisek sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 19ஆம் தேதி லக்னோவில் 61வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 65, ஐடன் மார்க்ரம் 61, நிக்கோலஸ் பூரான் 45 ரன்கள் எடுத்த உதவியுடன் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் சர்மா 59, இஷான் கிசான் 35, ஹென்றிச் க்ளாஸென் 47, கமிண்டு மெண்டிஸ் 32 ரன்கள் குவித்தனர். அதனால் 18.2 ஓவரிலேயே 206/4 ரன்களை எடுத்த ஹைதராபாத் தங்களுடைய 4வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது. மேலும் 7வது தோல்வியை சந்தித்த லக்னோவை நாக் அவுட் செய்த ஹைதெராபாத் இத்தொடரிலிருந்து தங்களுடன் வீட்டுக்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

மெகா சண்டை:

அந்த அணிக்கு அதிகபட்சமாக திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக அப்போட்டியில் ஹைதராபாத் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அடித்து நொறுக்கி 59 (20) ரன்களை 295 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அவரை அவுட்டாக்கிய திக்வேஷ் வழக்கம் போல தம்முடைய கையில் எழுதி விக்கெட்டை கொண்டாடினார்.

இருப்பினும் அதை பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த அபிஷேக் ஷர்மாவை பார்த்துக் கொண்டே கோபமாக சில வார்த்தைகளை சொல்லி அவர் கொண்டாடினார். அதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா “என்கிட்ட மோதாதே” என்ற வகையில் அவரை நோக்கி சென்று பதிலடி கொடுத்தார். அதற்கு திக்வேஷ் “உங்களை தவறாக எதுவும் சொல்லவில்லை. இது தான் என்னுடைய செலிப்ரேஷன்” என்று சொல்லியிருப்பார் என காட்சியில் தெரிந்தது.

- Advertisement -

இதெல்லாம் தேவையா:

அதற்கு இப்படிதான் கொண்டாடுவீர்களா? என்று அபிஷேக் சர்மா கோபமாக பதிலடி கொடுத்தார். அதனால் அவர்களிடைய மிகப்பெரிய சண்டை உருவானது. உடனடியாக நடுவர்கள் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்ட மற்ற வீரர்கள் உள்ளே புகுந்து சண்டையை நிறுத்தினார்கள். இறுதியில் போட்டியின் முடிவில் திக்வேஷ் – அபிஷேக் இருவரும் கோபமான முகத்துடன் கை கொடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: 206 ரன்ஸ் சாதனை சேசிங்கில்.. அபிஷேக் சரவெடி சாதனை.. லக்னோவை சேர்த்து வீட்டுக்கு கூட்டிப்போன ஹைதராபாத்

பின்னர் பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுற்றுலா அவர்கள் இருவரிடமும் பேசி என்ன நடந்தது என்பதைக் கேட்டு சமாதானம் செய்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சிரித்த முகத்துடன் கை கொடுத்து தோள் மேல் கை போட்டு நண்பர்களாக பேசிக் கொண்டனர். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி சர்ச்சையை உண்டாக்கும் கொண்டாட்டம் திக்வேஷ்க்கு தேவை தானா? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்

Advertisement