
சயீத் முஷ்டாக் அலி 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி ராஜ்கோட் நகரில் குரூப் ஏ பிரிவின் ஒரு போட்டியில் பஞ்சாப் மற்றும் மேகாலயா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேகாலயா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் போராடி 142-7 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக அர்பித் பாதேவாரா 31 ரன்கள் பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் அபிஷேக் சர்மா மற்றும் ரமந்திப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 143 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் ஹர்னூர் சிங் 6 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சலில் அரோரா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஆனால் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் அபிஷேக் ஷர்மா அவர்களுக்கும் சேர்த்து இந்த பக்கம் மேகாலயா பவலர்களை அடித்து நொறுக்கி அரை சதத்தை அடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய தலிவால் 22 (15) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 106* (29) ரன்களை 365.52 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.
அதனால் 9.3 ஓவரிலேயே 144-3 ரன்கள் எடுத்த பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மேலும் இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 28 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 2வது வேகமாக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்தார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அபிஷேக் சர்மா சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. சகில் சௌஹான்: 27 பந்துகள், எஸ்டோனியாவுக்கு எதிராக, 2024
2. அபிஷேக் சர்மா (இந்தியா): 28 பந்துகள், மேகாலயாவுக்கு எதிராக, 2024
2. உர்வில் படேல் (இந்தியா): 28 பந்துகள், திரிபுராவுக்கு எதிராக, 2024
3. கிறிஸ் கெயில்: 30 பந்துகள், புனேவுக்கு எதிராக, 2013
இதையும் படிங்க: என் குழந்தையோட பாத்தேன்.. ராகுல் தகுதியானவர்.. இந்தியாவுக்காக சுயநலமின்றி தனது இடத்தை அறிவித்த ரோஹித்
மேலும் ஒரு காலண்டர் வருடத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் யாதவ் (2022இல் 85) சாதனையை உடைத்த அபிஷேக் (2024இல் 87) புதிய சாதனை படைத்தார். அத்துடன் டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் (365.52) சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் சகில் சௌஹான் 351.21 ஸ்ட்ரைக் ரேட்டில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை.