அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா முன்னிலை வகிக்கிறது. முன்னதாக முதல் போட்டியில் சொந்த காரணங்களுக்காக விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பும்ரா தலைமையில் விளையாடி இந்தியா வென்றது.
தற்போது ரோகித் சர்மா இரண்டாவது போட்டிக்கு திரும்பியுள்ளதால் எங்கே பேட்டிங் செய்வார் என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ராகுல் 77 ரன்கள் குவித்தார். மேலும் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
தகுதியான ராகுல்:
இந்நிலையில் முதல் போட்டியில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஓப்பனிங் ஜோடியை பிரிக்க விரும்பவில்லை என்று ரோகித் சர்மா அறிவித்துள்ளார். எனவே தாம் 5, 6 போன்ற மிடில் ஆர்டரில் இடத்தில் விளையாடப் போவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் வெற்றிகரமான முடிவுகளை பெற விரும்புவதால் பேட்டிங்கில் நான் கீழே களமிறங்கும் தெளிவான முடிவுடன் வந்துள்ளேன்”
“முதல் போட்டியில் அவர்கள் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்தார்கள். அப்போட்டியை புதிதாக பிறந்த என்னுடைய குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கே.எல் ராகுல் பேட்டிங் செய்ததை வீட்டில் பார்த்தேன். அப்போது நம்முடைய ஓப்பனிங் ஜோடியை மாற்ற வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். வருங்காலத்தில் அது மாறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தற்போது நடந்தவை அடிப்படையில் கே.எல் ராகுல் இந்தியாவுக்கு வெளியே துவக்க வீரராக விளையாடத் தகுதியானவர்”
சுயநலமற்ற முடிவு:
“அந்த ஓப்பனிங் ஃபார்ட்னர்சிப் எங்களுக்கு முதல் போட்டியில் வெற்றியை கொண்டு வந்தது. ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து அமைத்த அந்த பார்ட்னர்ஷிப் எங்களுக்கு வெற்றியை கொடுத்தது. பெர்த் போன்ற கடினமான மைதானத்தில் நீங்கள் 500 ரன்கள் அடித்தது நிரப்ப வேண்டிய பெரிய கட்டமாகும். எனவே அந்த ஜோடியில் மாற்றத்தை நான் பார்க்க விரும்பவில்லை”
இதையும் படிங்க: 20 ஓவரில் 349 ரன்ஸ்.. 37 சிக்ஸ்.. சிக்கிமை அடித்து துவைத்த பரோடா.. மாபெரும் 2 உலக சாதனை
“வெளியே இருந்து பார்க்கும் போதும் அது மாற்ற வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் விளையாடுவது எனக்கு எளிது. தனிப்பட்ட முறையில் அது எனக்கு கொஞ்சம் எளிதல்ல. ஆனால் அணிக்காக அது நன்றாக இருக்கும்” என்று கூறினார். சொல்லப்போனால் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலேயே ராகுல் – ஜெய்ஸ்வால் ஜோடியை பிரிக்காமல் ரோகித் 4வது இடத்தில் சுயநலமின்றி விளையாடியது குறிப்பிடத்தக்கது.



