தனது குருவான யுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா – அடுத்த யுவின்னு சொன்னா தப்பே இல்ல

Abhishek and Yuvi
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டி20 அணியின் புதிய துவக்க வீரராக அபிஷேக் சர்மா விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான அவர் இன்றளவும் தனது அதிரடியால் வியக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் துவக்க வீரராக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா :

அந்தவகையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த சூப்பர் போர் சுற்றின் முதல் ஆட்டத்திலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 39 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்ததால் அவருக்கு இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

பவர்பிளே ஓவர்களிலேயே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிடும் திறன் கொண்ட அபிஷேக் ஷர்மா வெகு விரைவாக ரன்களை குவிப்பதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அவரை தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் வைத்திருக்க வேண்டும் என்றும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் அவரே துவக்க வீரராக விளையாடவேண்டும் என்ற ஆதரவுகளும் பெருகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அடித்த அரைசதத்தின் மூலம் தனது குருவான யுவ்ராஜ் சிங்கின் ஒரு சாதனையையும் தற்போது அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார். கடந்து 2012-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற டி20 போட்டியில் யுவ்ராஜ் சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 29 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக நாங்க தோற்க இதுவே காரணம்.. போட்டி முடிந்து வருத்தம் தெரிவித்த – பாக் கேப்டன்

அதனை தகர்த்த அபிஷேக் சர்மா நேற்று துபாய் மண்ணில் நடைபெற்ற போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் அடித்து யுவ்ராஜ் சிங்கின் அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக பாக் வீரர் முகமது ஹபீஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement