இந்திய அணிக்கு எதிராக நாங்க தோற்க இதுவே காரணம்.. போட்டி முடிந்து வருத்தம் தெரிவித்த – பாக் கேப்டன்

Salman Agha
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்று போட்டியானது நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.

இந்திய அணியிடம் நாங்க தோற்க இதுவே காரணம் : பாக் கேப்டன்

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான பர்ஹான் 58 ரன்களையும், சயிம் அயூப் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 74 ரன்களையும், சுப்மன் கில் 47 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில் : நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

- Advertisement -

இது ஒரு நல்ல போட்டி தான் ஆனாலும் இந்திய அணி வீரர்கள் பவர்பிளேவில் பேட்டிங் செய்த விதம் எங்களை போட்டியிலிருந்து வெளியேற்றியது. நாங்கள் பேட்டிங் செய்யும் போது முதல் 10 ஓவர்களில் நல்ல நிலையில் தான் இருந்தோம். ஆனால் அடுத்த 10 ஓவர்களில் இன்னும் அதிகமாக ரன் குவித்திருக்க வேண்டும். 170 முதல் 180 ரன்கள் வரை இலக்கு என்பது போதுமான ஒன்றுதான்.

இதையும் படிங்க : இந்தியாவை அடிச்சது எனக்கு பிடிக்கல.. அதான் பாகிஸ்தானுக்கு ஸ்கூல் நண்பனுடன் மருந்து போட்டேன்.. அபிஷேக் பேட்டி

ஆனாலும் இந்திய வீரர்கள் பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடியாக விளையாடியது தான் இந்த போட்டியில் இரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசமாக இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு அவர்கள் கொடுத்த அற்புதமான துவக்கமே காரணம். அதனாலே நாங்கள் தோல்வியை சந்தித்தோம் என சல்மான் ஆகா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement