விராட் கோலி, ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ

Abhishek Sharma
- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு 17-வது ஆசிய கோப்பை தொடரின் ஆறாவது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த அபிஷேக் சர்மா :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தனர். பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் ஃபர்கான் 40 ரன்களையும், ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 47 ரன்களையும், திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ரன்கள் குவித்தனர்.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் ஷர்மா முன்னாள் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 13 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 31 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களுக்குள் 30 ரன்களை விளாசிய முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் துவக்க வீரராக விராட் கோலி கடந்த 2022-ஆம் ஆண்டு துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 29 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : 63 டாட் பந்துகள்.. அவரை படிக்க முடியாம இந்தியாவிடம் இப்படியா தோற்ப்பீங்க.. பாகிஸ்தானை விமர்சித்த அக்ரம்

அதேபோன்று ரோகித் சர்மாவும் அதே 2022-ஆம் ஆண்டு துபாய் மைதானத்தில் 28 ரன்களை குவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரை தாண்டி தற்போது பவர்பிளே ஓவர்களுக்குள்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 30 ரன்கள் அடித்த முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement