- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை கடந்து நியூசி அணிக்கு எதிராக அசத்தல் சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய அபிஷேக் சர்மா :

இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக துவக்க வீரர் அபிஷேக் சர்மா 84 ரன்களையும், ரிங்கு சிங் 44 ரன்களையும் குவித்து அசத்தினர். நியூசிலாந்து அணி சார்பாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேக்கப் டஃபி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நிகழ்த்தியிருந்த சாதனையை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முதலிடத்தில் இருந்தனர். அவர்கள் இருவருமே நியூசிலாந்து அணிக்கு எதிராக 23 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தனர். இதுவே நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் அடித்த அதிவேக அரைசதமாக இருந்தது.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

இந்நிலையில் இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் கடந்திருந்ததன் மூலம் கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -