சர்வதேச டி20 போட்டிகளில் முதல் வீரராக மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – அபிஷேக் சர்மா

Abhishek Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 21-ஆம் தேதியான இன்று நாக்பூர் நகரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மிட்சல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

அபிஷேக் சர்மா நிகழ்த்திய மாபெரும் சாதனை :

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இந்த முதலாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலாவதாக விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக துவக்க வீரராக விளையாடிய இளம் இடது கை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த போட்டியில் 35 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இருந்தாலும் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இந்த போட்டியின் போது தான் சந்தித்த 22-வது பந்தில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை அரைசதம் எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை சமன் செய்த ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் ஆகியோர் 25 பந்துகளுக்கு குறைவாக ஏழு முறை அரைசதம் கடந்துள்ள வேளையில் இன்றைய போட்டியில் அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் எட்டாவது முறையாக டி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் அடித்து மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

Advertisement