
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் டி20 தொடர்களுக்கு மத்தியில் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடர் முடிவதற்கு முன்னதாகவே டி20 போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான தரவரிசை பட்டியலில் டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து 925 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான பில் சால்ட் இருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மா பிடித்துள்ளார். இந்த டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் எட்டாவது இடத்தை கேப்டன் சூரியகுமார் யாதவ் பிடித்துள்ளார்.
அதேபோன்று பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் ஹேசல்வுட் 10-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றபடி வருண் சக்கரவர்த்திக்கு அடுத்து இரண்டாவது இடத்தை அகில் ஹுசேனும் மூன்றாவது இடத்தை ரஷீத் கானும் பிடித்துள்ளனர்.
அதேபோன்று இந்த டி20 தரவரிசை பட்டியலில் வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. மேலும் டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை ஹார்டிக் பாண்டியா நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டான சயிம் அயூப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மா விளையாடுறத பாக்குறதே ஒரு ட்ரீட் தான்.. அவரிடம் அந்த டேலன்ட் இருக்கு – ஷேன் வாட்சன் கருத்து
அவருக்கு அடுத்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா இரண்டாவது இடத்தினையும், ரோஸ்டன் சேஸ் மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 9 இடங்கள் முன்னேறி 30-வது இடத்தையும், சயிம் அயூப் 10 இடங்கள் முன்னேறி 39-வது இடத்தை பிடித்துள்ளனர்.