அபிஷேக் சர்மா விளையாடுறத பாக்குறதே ஒரு ட்ரீட் தான்.. அவரிடம் அந்த டேலன்ட் இருக்கு – ஷேன் வாட்சன் கருத்து

Watson and Abhishek
- Advertisement -

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 484 ரன்களை குவித்த அபிஷேக் ஷர்மா 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியாக விளையாடியதன் காரணமாக கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பினை பெற்றார். அப்படி தனது அறிமுக தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார்.

அபிஷேக் சர்மா ஆட்டத்தை பார்ப்பதே ஒரு ட்ரீட் தான் : ஷேன் வாட்சன்

அதன்பிறகு அவர் வாய்ப்புக்காக மீண்டும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் அவருக்கு பதிலாக நிரந்தர இடத்தை பிடித்த அபிஷேக் சர்மா மிகச்சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும் தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் அதிரடியில் அசர வைத்து வருகிறார்.

ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடி வரும் அவரது ஆட்டம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரரான அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை பார்ப்பதே ஒரு ட்ரீட் தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே அபிஷேக் சர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது விளையாடி வருகிறார். எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் பவுலருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : என்னுடைய இந்த திறமைக்கு காரணமே தினேஷ் கார்த்திக் தான்.. ஜிதேஷ் சர்மா வெளிப்படை – விவரம் இதோ

அதுமட்டும் இன்றி அவரிடம் அனைத்து வகையான ஷாட்களும் இருப்பதனால் அவரது ஆட்டத்தை பார்ப்பதே நமக்கு ஒரு ட்ரீட் தான். அதுமட்டுமின்றி பயமின்றி அவர் பந்து வீச்சாளருக்கு எதிராக முதல் பந்திலிருந்தே அடிக்கப்போவதை பார்க்க மிகச் சிறப்பாக இருப்பதாகவும் ஷேன் வாட்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement