என்னுடைய இந்த திறமைக்கு காரணமே தினேஷ் கார்த்திக் தான்.. ஜிதேஷ் சர்மா வெளிப்படை – விவரம் இதோ

Jitesh Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது டி20 போட்டியின் போது ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர் மூன்றாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு அவர்தான் காரணம் : ஜிதேஷ் சர்மா

அதிலும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து இறுதிக்கட்டத்தில் விளையாடியிருந்த ஜிதேஷ் சர்மா ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். சுப்மன் கில் இந்திய டி20 அணிக்குள் வந்ததற்கு பிறகு சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு தள்ளப்பட்டார்.

- Advertisement -

ஆனால் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்பதனால் பினிஷராக சிறப்பாக விளையாடிய வரும் ஜிதேஷ் சர்மா பின் வரிசையில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தான் இடம் பிடித்தது குறித்தும் தன்னுடைய ஆட்டத்திற்கு தினேஷ் கார்த்திக் எந்த வகையில் உதவினார் என்பது குறித்தும் ஜிதேஷ் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது நான் விளையாட இருப்பதாக தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று சிறப்பாக விளையாடினேன். என்னுடைய பேட்டிங் திறமை இந்த அளவிற்கு மேம்படுவதற்கு காரணம் தினேஷ் கார்த்திக் தான்.

இதையும் படிங்க : 107/9 டூ 157/9.. தனியாளாக வெறித்தனமாக போராடிய சான்ட்னர் உலக சாதனை.. வெ.இஸிடம் வீழ்ந்த நியூஸிலாந்து

அவர்தான் என்னுடைய பேட்டிங்கில் இருந்த குறைகளை கலைந்து சில புதிய ஷாட்டுகளையும் விளையாட கற்றுக் கொடுத்து உதவினார். ஆர்.சி.பி அணியில் அவருடன் இணைந்து பயிற்சி செய்தபோது பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டதாகவும் தினேஷ் கார்த்திக் குறித்து ஜிதேஷ் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement