
தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார். அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாட வரும் அவருக்கு போதிய போட்டிகள் கிடைப்பதில்லை என்ற விமர்சனம் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதேவேளையில் தனக்கு கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் கடந்த ஆண்டு தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.
இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் அவர் பெரும்பாலான போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர்பிளே ஓவர்களில் பந்துவீசுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் டாப் ஆர்டரில் விளையாடும் திறன் உடையவராக வாஷிங்டன் சுந்தர் பார்க்கப்படுகிறார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் வெளியேற நினைத்தார் என்று கூறியுள்ள முன்னாள் தமிழக வீரரான அபிநவ் முகுந்த் ரூதர்போர்டின் ட்ரேடிங் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தனக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் ஒரு சந்தேகம் இருக்கிறது.
கடந்த ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருக்கு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. எனவே அவர் அந்த அணியை விட்டு வெளியேற நினைத்திருப்பார். அதேவேளையில் ரூதர்போர்டு இருந்ததாலேயே வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு தர முடியாத நிலை இருந்தது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அவரை மாற்றுங்கள் – அஷ்வின் கருத்து
ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் திறமைக்கு குறைந்தபட்சம் முதல் ஆறு இடங்களில் ஒரு பேட்ஸ்மனாக அவர் களமிறங்க வேண்டும். இதன் காரணமாகவே ரூதர்போர்டை டிரேடிங் முறையில் குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் இம்முறை நிச்சயம் குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அபிநவ் முகுந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.