அவர டி20 பிளேயர்ன்னு மட்டும் நினைக்காதீங்க, மத்த ஃபார்மட்லயும் சான்ஸ் கொடுக்கலாம் – இளம் வீரரை பாராட்டிய அபினவ் முகுந்த்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது. முன்னதாக 2024 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் இத்தொடரில் இளம் வீரர்களுடன் விளையாடி வரும் இந்தியாவுக்கு இஷான் கிசான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் சுமாராக செயல்பட்டு ஏமாற்றத்தையும் பின்னடைவையும் கொடுத்தனர்.

ஆனால் 20 வயதில் இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற திலக் வர்மா முதலிரண்டு போட்டிகளில் சவாலான பிட்ச்சில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறிய போது அட்டகாசமாக பேட்டிங் செய்து 39, 51 ரன்கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதே போல 3வது போட்டியிலும் சூரியகுமார் யாதவுடன் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 49* ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரர் (51) என்ற ரோஹித் சர்மாவின் (50) சாதனையை உடைத்துள்ளார்.

- Advertisement -

தாராளமா கொடுக்கலாம்:
மேலும் தன்னுடைய முதல் 3 டி20 போட்டிகளில் 30க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமாரின் சாதனையையும் சமன் செய்துள்ள அவர் சவாலான பிட்ச்களில் அசத்துவதால் நிச்சயம் வருங்காலங்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் சிறப்பாக செயல்பட்டு தற்போது இத்தொடரிலும் அசத்தும் திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒருநாள் போன்ற இதர வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தகுதியுடையவர் என்று முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தேவையான வேலையை மிகவும் கச்சிதமாக செய்து சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தார். திலக் வர்மா தம்முடைய விருப்பத்திற்கு இடமின்றி வேறு எதையும் விளையாடவில்லை என்று நான் உணர்கிறேன். அதாவது அவர் தன் வேலையை செய்து கொண்டே சென்றார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியாக விளையாட முயற்சித்த போது இவர் எதிர்புறம் தேவையின்றி எதுவும் செய்யாமல் நிதானத்தை காட்டினார்”

- Advertisement -

“அந்த வகையில் அவருடைய முதிர்ச்சித் தன்மையை நான் மிகவும் விரும்புகிறேன். அதே போல பேட்டிங் செய்து ஃபினிஷிங் செய்து அவர் வெற்றியை பெற்றுக் கொடுத்தது இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்திற்கு நல்ல அறிகுறியாகும். அப்படி சிறப்பாக விளையாடிய அவரை ராபின் உத்தப்பா இதே நிகழ்ச்சியில் பாராட்டினார். அதிலும் யுவராஜ் சிங்குடன் அவரை ஒப்பிடுவதையும் உத்தப்பா விரும்பினார். மொத்தத்தில் இந்த தொடரில் விளையாடிய விதத்தை வைத்து ஒருநாள் போன்ற இதர வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கான கதவை திலக் வர்மா தட்டுவதற்கு துவங்கியுள்ளார்” என்று கூறினார்.

அப்படி 20 வயதிலேயே முதிர்ச்சியுடன் விளையாடும் திலக் வர்மாவை 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் குறைந்தபட்சம் பேக் அப் வீரராகவாவது தேர்வு செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் வெளிப்படையாகவே பாராட்டினார். ஏனெனில் 2011 உலக கோப்பையில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோஹித் முதல் பாண்டிய வரை டாப் 6 வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க:ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் உச்சம் தொட்ட சுப்மன் கில். எத்தனையாவது இடம் தெரியுமா? – விவரம் இதோ

எனவே கிட்டத்தட்ட சுரேஷ் ரெய்னா போலவே துடிதுடிப்பான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்யும் திலக் வர்மா மிக விரைவாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை வருங்காலங்களில் ஒருநாள் அணியிலும் முதன்மை வீரராக உருவெடுப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement