அதிக பணம் இருக்குறதால மெத்தனமா இருக்காரு. இந்திய வீரரை சாடிய – அப்துல் ரசாக்

Razzaq
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணி வீரர்கள் குறித்த பல சர்ச்சையான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். அடிக்கடி இதேபோன்று இந்திய அணி வீரர்கள் குறித்த கருத்துக்களை கூறி ரசிகர்கள் மத்தியில் அதிக விமர்சனங்களைப் பெற்று வந்தவர் சோயிப் அக்தர். அவரின் பல கருத்துக்கள் இந்திய அணி வீரர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அதிக விமர்சனத்தை பெறும்.

Razzaq

- Advertisement -

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹாட்ரிக் பாண்டியா குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அவர் பாண்டியா குறித்து வெளியிட்டுள்ள இந்தக் கருத்தில் பாண்டியா விற்கு எதிராக அவர் பேசியிருப்பது தோன்றுகிறது.

ரசாக் பாண்டியா குறித்து வெளியிட்டுள்ள கருத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : பாண்டியா அதிக அளவு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து விரிவாக பேசியதில் கூறியதாவது : அவரிடம் பெரிய கிரிக்கெட் வீரருக்கான திறமைகள் அனைத்தும் உள்ளன.

Pandya

ஆனால் அவர் கடுமையாக உழைக்க மறுக்கிறார். அவர் மனதளவிலும் உடலளவிலும் கிரிக்கெட்டின் மீது தனது கவனத்தை திருப்பி கடுமையாக உழைத்தால் பெரிய வீரராக மாறும் அனைத்து தேவையான திறமையும் அவரிடம் உள்ளன. பாண்டியா ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் அவருக்கு உண்டான எதிர்காலம் சிறப்பாக உள்ளது. ஆனால் அவரால் ஆல்-ரவுண்டராக தொடர்ந்து நீடிக்க கடின உழைப்பு தேவை.

- Advertisement -

அவ்வாறு அவர் கடினமாக உழைத்தால் மட்டுமே அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும். நீங்கள் கிரிக்கெட்டிற்கு போதுமான நேரம் கொடுக்காத போது கிரிக்கெட் உங்களை விட்டு விலகிச் செல்லும் உங்களிடம் நிறைய பணம் இருக்கும் போது நீங்கள் அதிக ஓய்வினை எதிர்பார்க்கிறீர்கள் என்று அவர் பேசியுள்ளார். மேலும் இம்ரான் கான் மற்றும் கபில்தேவ் ஆகியோர் எல்லா காலகட்டத்திலும் சிறப்பான ஆல்-ரவுண்டராக திகழ்ந்தனர். அதேபோல் தற்போது பாண்டியா இருக்க வேண்டும்.

Pandya

பாண்டியாவும் அவர்கள் அருகிலேயே இருக்கிறார் என்று ரசாக் பேசியது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் விளை யாடி இந்திய அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்த்த பாண்டியாவின் நிலை தற்போது மீண்டும் சிக்கலில் உள்ளது.

Advertisement