இறுதிப்போட்டியில் இதுமட்டும் நடந்தா விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாடுவேன் – ஏ.பி டிவில்லியர்ஸ் கருத்து

ABD and Kohli
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பி அணியும் இருந்து வருகிறது. வருடா வருடம் பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தாலும் இதுவரை அந்த அணி கோப்பையை கைப்பற்றாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஆனாலும் என்றைக்குமே ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் பெங்களூரு அணியை விட்டுக் கொடுக்காமல் இதுவரை தொடர்ச்சியாக தங்களது முழு ஆதரவினை வழங்கி அந்த அணியை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாட விரும்புகிறேன் : ஏ.பி.டி

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் பொன்னான வாய்ப்பு தற்போது ஆர்.சி.பி அணிக்கு காத்திருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டு மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்சிபி அணியானது அனைத்து துறைகளிலும் பலமாக இருப்பதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியின் போது பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடிய பெங்களூரு அணி மிக எளிதாக அவர்களை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியிலும் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்களது 18 ஆண்டுகால கனவை பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் பெங்களூரு அணியில் பல ஆண்டுகாலம் விளையாடிய தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி டிவில்லியர்ஸ்சும் இம்முறை ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று காத்திருப்பதாக தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். மேலும் இந்த இறுதி போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் எப்படியாவது மைதானத்திற்கு ஓடி சென்று விராட் கோலியை கட்டி அணைத்து அந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன் என ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ள அவர் 184 போட்டிகளில் 3 சதம் மற்றும் 40 அரைசதங்கள் என 5162 ரன்கள் குவித்துள்ளார். ஆர்சிபி அணிக்காக பல ஆண்டுகாலம் விராட் கோலியுடன் இணைந்து விளையாடியுள்ள அவர் பல்வேறு வரலாற்று வெற்றிகளில் பங்கு கொண்டவர்.

இதையும் படிங்க : இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்.. வெற்றி உறுதி – விவரம் இதோ

ஆனாலும் இதுவரை அவரால் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட கைப்பற்ற முடியாத வேளையில் விராட் கோலி ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றால் அதனை நானும் கொண்டாடுவேன் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement