ஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். துவக்க வீரர்களான பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் முறையே 47 மற்றும் 32 ரன்களை குவித்தனர் .அதன்பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது.
கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 34 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்றவர்கள் யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க.து பெங்களூர் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நான்கு ஊர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் டிவில்லியர்ஸ் கூறுகையில் : மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய இந்த சிறப்பான ஆட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறிய போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் இன்றைய போட்டியில் நான் அணிக்கு பங்களிப்பை அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இன்றைய போட்டியில் எனக்கே ஒரு சர்ப்ரைஸ் ஆக இருந்தது.
ஏனெனில் இந்த மைதானம் சற்று ஸ்லோவாக இருந்ததால் நாங்கள் பேட்டிங் செய்த போது குறைந்த அளவு ரன்களை அடிக்க கூடாது என்றும் எவ்வளவு முடியுமோ அதுவரை அடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் 195 ரன்கள் கிடைத்தது மிகவும் சர்ப்ரைசாக அமைந்தது. அதுமட்டுமின்றி எங்கள் அணியின் பவுலிங் யூனிட் தற்போது தரமாக உள்ளது. இது போன்ற சின்ன மைதானத்தில் சிறப்பாக பந்துவீசி பவுலர்கள் தங்களது திறனை நிரூபித்தார்கள்.
கீப்பராக போட்டியைப் பார்ப்பது ஒரு நல்ல விடயம் ஏனெனில் போட்டியின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். இந்த போட்டியில் வீரர்கள் பல்வேறுவிதமான திறன்களை வெளிப்படுத்தினர். பெங்களூர் அணிக்கு என்னால் என்ன சிறப்பாக தர முடியுமோ அதை எப்பொழுதும் தருவேன் என்றும் டிவில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.