இது எப்படி நடந்தது என்றே எனக்கு தெரியவில்லை. போட்டியின் திருப்புமுனை குறித்து பேசிய ஏ.பி.டி – விவரம் இதோ

Abd

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக அந்த அணியின் அனுபவ வீரரான டிவில்லியர்ஸ் திகழ்ந்தார். 27 பந்துகளை சந்தித்த டிவில்லியர்ஸ் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 48 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் போது ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

abd 2

சிறப்பாக விளையாடி வந்த அவர் போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்த பிறகே வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு ஹர்ஷல் படேல் மற்றும் சிராஜ் ஆகியோர் களத்திலிருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கேப்டன் கோலி 33 ரன்களும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 39 ரன்கள் குவித்து வெற்றிக்கு உதவினார்கள்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்களை குவிக்க 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி இந்த போட்டியை அபாரமாக வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிவிலியர்ஸ் கடைசி நேரத்தில் தான் ரன்அவுட் ஆனது குறித்து போட்டி முடிந்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

abd

முன்பு ட்ரெட்மில்லில் ரன்னிங் பயிற்சி எடுத்தேன். ஆனால் அது எனக்கு கடினமானதாக இல்லை. அதனால் எனக்கு அதில் திருப்தி இல்லை. தற்போது மணலில் ரன்னிங் பயிற்சி எடுக்கிறேன். இந்த போட்டியில் வெற்றிக்கு அருகாமையில் இருக்கும் போது நான் எப்படி ரன்அவுட் ஆனேன் என்று எனக்கு உண்மையில் தெரியவே இல்லை. நான் பந்தினை தட்டிவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடத் தொடங்கியபோது பின்னோக்கி ஓடுவதைப் போல உணர்ந்தேன்.

- Advertisement -

abd 1

அது ஒரு அருமையான த்ரோ நான் கிரீசுக்கு செல்வதற்கு முன்னாலேயே பந்து வேகமாக விக்கெட் கீப்பருக்கு வந்தது. அதனால் டைவ் அடித்தும் எனது விக்கெட்டை காப்பாற்ற முடியவில்லை என ஏபி டிவிலியர்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் வெற்றியை ருசித்த உள்ள பெங்களூரு அணி அடுத்ததாக புதன்கிழமை ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.