விராட் கோலியை ஆரம்பத்தில் பிடிக்காது.. பின்னர் நாங்க நெருங்கிய நண்பர்களாக மாற இதுவே காரணம் – ஏ.பி.டி பேட்டி

ABD and Virat
- Advertisement -

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்று சில தினங்கள் கடந்த நிலையில் அவருடனான பிணைப்பு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸும் விராட் கோலியுடனான தனது உறவு குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விராட் கோலியுடனான நட்பு குறித்து பேசிய ஏ.பி.டி :

ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக இணைந்து விளையாடிய அவர்கள் காலப்போக்கில் நெருங்கிய நண்பர்களாக மாறியதோடு மட்டுமின்றி குடும்ப நண்பர்களாகவும் மாறி இருக்கிறார்கள். பொது வெளியில் ஏற்கனவே பலமுறை அவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமலும் பேசியிருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அளவிற்கு அவர்களது நட்பு மிக பலமாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆரம்பத்தில் தனக்கு விராட் கோலி பார்த்தால் பிடிக்காது என்றும் பின்னர் நாளடைவில் நாங்கள் எவ்வாறு மிக நெருங்கிய நண்பர்களாகவும் மாறினோம் என்பது குறித்தும் ஏ.பி.டி வில்லியர்ஸ் மனம் திறந்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி எனக்கு கிரிக்கெட்டில் சகோதரர் போன்றவர். ஆரம்பத்தில் அவரைப் பார்த்தால் எனக்கு பிடிக்காது.

ஆனால் அவரது குணத்தை பற்றி தெரிந்து கொண்டதும் அவரை மிகவும் பிடித்து விட்டது. அதிலும் குறிப்பாக நான் அவருக்கு எதிராக விளையாடும் போது எப்போதுமே அந்த போட்டி கடினமான ஒன்றாக இருக்கும். அவர் எதிரணியில் விளையாடும் போது நம்மை நண்பராக பார்க்க மாட்டார் கடுமையான போட்டியாளராகவே நினைப்பார். ஆனால் ஐபிஎல் தொடரில் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாட ஆரம்பித்த பின்னர் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.

- Advertisement -

அப்போது தான் விராட் கோலி எனக்கு சகோதரர் போன்றவராக மாறினார். பின்னர் அவருக்கு அருகில் இருந்து நான் அவரைப் பற்றி மேலும் நிறைய விடயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் மிக நெருக்கமான நட்பு ஆரம்பித்தது. களத்தில் அவர் சிறந்த போட்டியாளராகவும், போர்த்தன்மை உடையவராகவும் இருந்தார். நாளடைவில் எங்களுக்குள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து ஒன்றாக இணைந்து பல்வேறு சிறப்பான போட்டிகளில் விளையாடவே நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம். அதன் பின்னர் குடும்ப நண்பர்களாகவும் மாறினோம்.

இதையும் படிங்க : வெளிநாட்டு வீரர்கள் வரலனா என்ன? எஞ்சிய சீசனுக்கான புதிய ரூல்ஸ்ஸை கொண்டு வந்த நிர்வாகம் – விவரம் இதோ

அவருடன் விளையாடிய காலங்களை என்னால் மறக்க முடியாது. அவருடன் நான் விளையாடிய அனைத்து போட்டிகளையும் ரசித்து விளையாடினேன். நாங்கள் இருவருமே அனைத்து போட்டியிலும் வெற்றி பெறுவதில் மட்டுமே உறுதியாக இருந்தோம். எங்களுடைய அணிக்கு தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்கினோம் என ஏ.பி.டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement