இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள வேளையில் அடுத்ததாக 18-ஆவது ஐபிஎல் சீசனானது வரும் மார்ச் மாதம் முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த ஐ.பி.எல் தொடர் துவங்க ஒருசில மாதங்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விராட் கோலி தான் சரியான வீரர் :
இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமும் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால் சில அணிகளில் கேப்டன் மாற்றமும் நடைபெற்றுள்ளது.
அந்த வகையில் பெங்களூரு அணியும் தங்களது அணியில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக டூப்ளிசிஸ் அந்த அணியால் தக்கவைக்கப்படாமல் வெளியேற்றப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதோடு பல்வேறு நட்சத்திர வீரர்களும் அந்த அணியால் இந்த ஆண்டு வாங்கப்பட்டுள்ள வேளையில் மீண்டும் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது மிகச் சிறப்பான முடிவாக இருக்கும் என்று ஆர்.சி.பி அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஆர்.சி.பி அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு என்னை பொறுத்தவரை விராட் கோலி மட்டும் தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். ஏனெனில் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் முன்பு இருந்ததை விட அதிக உத்வேகத்துடன் காணப்படுகிறார். அதோடு அவரால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்து மேட்ச் ஃவின்னிங் இன்னிங்ஸ் விளையாட முடியும்.
இதையும் படிங்க : அடுத்த டி20 வேர்ல்டுகப்ல வருண் சக்ரவர்த்தி தான் நம்பர் 1 பவுலர்.. ஏன் தெரியுமா – முகமது கைப் கருத்து
அதன் காரணமாகவே அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி ஆர்.சி.பி அணிக்காக அவர் ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இருக்கிறார். அவரும் அந்த அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் அதற்கு கோலி கேப்டனாக இருக்க வேண்டும் என்று ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.



