
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது இந்த தொடருக்கு பின்னதாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அசத்தப்போகும் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஆஸ்திரேலியா மைதானங்களில் அசத்துவார் என ஏ.பி.டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் ஒரு கேப்டனாக அற்புதமாக செயல்பட்டு இருக்கிறார். அவருடைய அணுகுமுறை வீரர்களுக்கு இடையே மிகச்சிறப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது. அபிஷேக் சர்மா தற்போது தனது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார்.
டி20 போட்டிகளில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் ஆஸ்திரேலிய மைதானங்களிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்களில் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் அதனை அவர் விரும்பி விளையாடுவார். அதோடு ஆப் சைடு, லெஃக் சைடு என எந்த திசையிலும் அவரால் நன்றாக அடிக்க முடியும்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு அந்த பொறுப்பினை வழங்கியது சரிதான்.. ஆதரவு குரல் கொடுத்த – ஆரோன் பின்ச்
அதனால் நிச்சயம் இந்த ஆஸ்திரேலியா மைதானங்களில் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புவதாக ஏ.பி.டி கூறியுள்ளார். கடைசியாக நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பையில் தொடரில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய அவர் 314 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.