டிவிலியர்ஸிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்ற விராட் கோலி. பி.சி.சி.ஐ பகிர்ந்த தகவல் – விவரம் இதோ

Kohli-3
- Advertisement -

நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் குவிக்க 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் 5.2 ஓவர்களில் 56 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கம் கொடுக்க முதல் விக்கெட்டாக ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் இந்திய அணி கேப்டன் விராட்கோலி களமிறங்கினார்.

Kohli

- Advertisement -

களமிறங்கியது முதலே அதிரடி காட்டிய கோலி ஆஸ்திரேலிய அணியை தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் வெளுத்து வாங்கினார். இந்த போட்டியில் 24 பந்துகளை சந்தித்த கோலி 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 40 ரன்கள் அடித்து அசத்தினார். பொதுவாக கிரிக்கெட்டில் ப்ராப்பர் ஷாட்டுகளை முறைப்படி விளையாடும் கோலி புதிய விசித்திரமான ஷாட்டுகளை ஏதும் விளையாடுவது கிடையாது.

ஆனால் டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் டி20 பார்மெட்டில் ரன்களைக் குவிக்க புதுப்புது ஷாட்டுகளை விளையாடி வருகின்றனர். அந்தவகையில் சவுத் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான டிவிலியர்ஸ் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பல வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடுவார். அதில் முட்டி போட்டு பின்புறம் அடிக்கும் ஸ்கூப் ஷாட் விளையாடுவதில் அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என்ற அளவிற்கு சிறப்பாக விளையாடக் கூடியவர் .

Kohli-1

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் எதிராக விராத் கோலியும் முட்டிபோட்டு அதேபோன்ற ஸ்கூப் ஷாட் மூலம் சிக்சர் ஒன்றைப் பறக்கவிட்டார். இது ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய விடயமாகவே இருந்தது. மேலும் பொதுவாக இதுபோன்ற ஷாட்டுகளை விளையாடாத கோலி இந்த ஷாட்டை பயன்படுத்தியது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

- Advertisement -

மேலும் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய போதும் விராட் கோலி இந்த ஷார்ட் குறித்து ஏபி டிவிலியர்ஸ்க்கு தான் மெசேஜ் அனுப்ப இருப்பதாகவும் அதற்கு அவர் என்ன ரிப்ளை கொடுக்கிறார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அந்த பதிவினை பிசிசிஐ வெளியிட அதற்கு ஏபி டி வில்லியர்ஸ் பதிலளித்துள்ளார்.

அதில் சிரிக்கும்படி ஒரு ஸ்மைலியும் அருமை என்று கூறும் செய்கையையும் அவர் விராட் கோலியின் அந்தப் புகைப்படத்திற்கு பதிலாக அளித்துள்ளார். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பகிர்ந்துள்ளது. மேலும் விராத் கோலிக்கு ஏபிடி யிடம்இருந்து அப்புரோவல் கிடைத்துள்ளது என்று அந்த பதிவை பகிர்ந்துள்ளது. இந்த பதிவு ரசிகர்களிடமிருந்தும் பல்வேறு கமெண்டுகளை பெற்று வருகிறது.

Advertisement