கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்ற விராட் கோலி. நெகிழ்ச்சியான வார்த்தைகளால் உருகவைத்த – ஏ.பி.டி

ABD
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பணிச்சுமை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து இந்த உலகக் கோப்பை தொடருடன் விலக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இரண்டாவது பாதியின் துவக்க ஆட்டத்தின் போது தான் இந்த ஐபிஎல் தொடரோடு ஆர்.சி.பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் அடுத்த ஆண்டு மட்டுமின்றி இனி வரும் அனைத்து ஆண்டுகளிலும் ஆர்.சி.பி அணிக்காக ஒரு வீரராக தான் தொடர விரும்புவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

Morgan

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணி தோற்று இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனுடன் சேர்த்து விராட் கோலியும் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இந்நிலையில் விராத் கோலி பதவி விலகியதை அடுத்து அவருக்கு பாராட்டுகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், பெங்களூரு அணியின் வீரர்களும் தெரிவித்தனர்.

அந்தவகையில் விராத் கோலியுடன் நெருங்கி பழகியவரான ஏ.பி.டிவில்லியர்ஸ் கோலியின் கேப்டன்சி குறித்து பேசுகையில் கூறியதாவது : பெங்களூர் அணியின் கேப்டனாக பயணித்த இந்த 9 ஆண்டுகளும் நானும் அவருடன் அதே அணியில் பயணித்து உள்ளேன். அவர் எங்களை முன்னின்று வழி நடத்தியது எங்களது அதிர்ஷ்டம். கோப்பையை வெல்ல வில்லை என்றாலும் நீங்கள் வழிநடத்தியது பலரையும் ஈர்த்துள்ளது, என்னையும் சேர்த்துதான்.

Kohli-ABD

ஒரு வீரராகவும், மனிதராகவும் என்னை பக்குவமடைய செய்தது உங்கள் கேப்டன்சி தான். அணியின் தலைவனாக நீங்கள் பல மைல்களை கடந்து உள்ளீர்கள். மைதானத்திற்கு உள்ளேயும் சரி, மைதானத்திற்கு வெளியேயும் சரி உங்களை நன்கு அறிந்தவன் நான். எனவே கோப்பையை வெல்வது காட்டிலும் நீங்கள் பல வீரர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து உள்ளீர்கள் என விராத் கோலியை மனதார புகழ்ந்து தள்ளியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சென்னை அணி வெற்றி பெற்ற போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததா ? – இர்பான் பதான் காட்டம்

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக தலைமைப் பொறுப்பை தாங்கி விளையாடி வரும் விராட் கோலியுடன் முக்கிய வீரராக ஏபிடி தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 226 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement