கொஞ்சம் ஸ்லோ தான்.. இருந்தாலும் டீமுக்கு அதுதான் தேவைன்னு புரிஞ்சி திலக் வர்மா அசத்திட்டாரு – ஏ.பி.டி பாராட்டு

Tilak Varma and ABD
- Advertisement -

கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணியானது பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதன்படி நடைபெற்று முடிந்த அந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே குவித்தது.

ஸ்லோவா ஆடுனாலும் ஸ்டெடியா ஆடுனாரு : ஏ.பி.டி பாராட்டு

பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 53 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 69 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் திலக் வர்மா விளையாடிய இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : திலக் வர்மா ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மிகவும் நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடியதாக நினைக்கிறேன். 53 பந்துகளில் 69 ரன்களை குவித்தது அவரது தரத்திற்கு சற்று பொறுமையான இன்னிங்ஸ்தான் இருந்தாலும் இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் அவரது இந்த ஆட்டமே வெற்றிக்கு அழைத்து சென்றிருந்தது.

- Advertisement -

அந்த இறுதி போட்டியில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அழுத்தத்தை சந்தித்து சரிவை நோக்கி நகர்ந்த வேளையில் அவர் நங்கூரமாய் நின்று விளையாடியுள்ளார். அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு சூழலுக்கு ஏற்ப அவர் மைதானத்தை கணித்து விளையாடியது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விடயம். திலக் வர்மாவின் அந்த இன்னிங்ஸ் ஒரு அற்புதமான இன்னிங்ஸ் என்று ஏ.பி.டி வில்லியர்ஸ் அவரை பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : 8 வருஷம்.. 2017-ல் விட்டதை இந்த ஆண்டு கே.எல் ராகுல் எட்டி பிடிப்பார் – பார்த்திவ் பட்டேல் பேட்டி

ஏபிடி கூறியது போலவே இந்திய அணி ஒரு கட்டத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் நான்காவது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த சிலக் வருமா 57 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை நிலைப்படுத்தியதோடு ஷிவம் தூபேவுடன் சேர்ந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement